‘மலேசியாவில் கோழி விநியோகத் தட்டுப்பாடு இன்னும் ஒரு மாதத்தில் சரியாகிவிடும்’

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கோழி விநி­யோ­கத் தட்­டுப்­பாடு இன்­னும் ஒரு மாதத்­தில் சரி­யா­கி­வி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக மூத்த அர­சாங்க அதி­காரி ஒரு­வர் தெரி­வித்துள்­ளார்.

அடுத்த மாதம் ஹஜ்­ஜுப் பெரு­நாள் கொண்­டாட்­டத்­தின்­போது தேவை­யைப் பூர்த்­தி­செய்ய போது­மான அளவு கோழி விநியோகம் இருக்­கும் என கால்­நடை மருத்­துவச் சேவைத் துறை தலைமை இயக்­கு­நர் நூர்­லி­ஸான் முகம்­மது நூர் நேற்று முன்­தி­னம் கூறி­ய­தாக பெர்­னாமா நிறு­வ­னம் செய்தி வெளி­யிட்­டது.

மலே­சி­யா­வில் ஜூலை 10ஆம் தேதி ஹஜ்­ஜுப் பெரு­நாள் கொண்டா­டப்­ப­ட­வுள்­ளது.

கோழி விநி­யோ­கத் தட்­டுப்­பாட்­டைச் சரி­செய்ய அர­சாங்­கம் தலை­யிட்­டுள்­ள­தா­லும் கோழிப் பண்­ணை­யா­ளர்­க­ளு­டன் இணைந்து அர­சாங்க அமைப்­பு­கள் பணி­யாற்றி வரு­வ­தா­லும் நில­வ­ரம் மேம்­பட்­டு உள்­ள­தாக திரு நூர்­லி­ஸான் கூறி­னார்.

"கோழி உற்­பத்­தியை அதி­க­ரிக்க அவை கடப்­பாடு கொண்­டுள்­ளன. நில­வ­ரம் மீட்­சி­ய­டைந்து வரு­கிறது," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் கூறி­னார்.

பரு­வ­நிலை மாற்­றம், கோழிப் பண்­ணை­யில் ஆள்­பற்­றாக்­குறை, கோழி­க­ளி­டையே பர­வும் நோய்­கள் போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளால் மலே­சி­யா­வில் கோழித் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது எனத் தொழில்­துறை நிறு­வ­னங்­கள் தங்­க­ளி­டம் சொன்­ன­தாக திரு நூர்­லி­ஸான் கூறி­னார்.

உள்­ளூர் கோழிப் பண்­ணை­யாளர்­களில் கிட்­டத்­தட்ட 80 விழுக்­காட்­டி­னர் திறந்­த­வெளி கோழிப் பண்­ணை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வதாக திரு நூர்­லி­ஸான் குறிப்­பிட்­டார். இது, வெப்­ப­மான வானி­லைக்­கும் ஈக்­கள் மூலம் பர­வும் நோய்­களுக்­கும் கோழி­களை உட்படுத்து­கிறது.

பண்­ணை­யா­ளர்­களில் சிலர் மட்டுமே மூடப்­பட்ட கோழிப் பண்­ணை­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!