பிலிப்பீன்சில் எரிமலை வெடித்தது

மணிலா: கிழக்கு பிலிப்­பீன்­சில் எரி­மலை ஒன்று நேற்று வெடித்­த­தில் சாம்­பல் வெளி­யா­ன­தன் கார­ண­மாக, அப்­ப­கு­தி­யைச் சுற்றி­யுள்ள குடி­யி­ருப்­புப் பகு­தி­களி­லி­ருந்து மக்­கள் வெளி­யே­றி­னர்.

சொர்­சொ­கோன் மாநி­லத்­தில் உள்ள புலு­சான் எரி­மலை வெடிப்பு ஏறக்­கு­றைய 17 நிமி­டங்­கள் நீடித்­தது. மேல்­நோக்கி குறைந்­தது 1 கிலோ­மீட்­டர் தூரத்­திற்கு அது சாம்­ப­லைக் கக்­கி­யது.

இந்­தச் சம்­ப­வத்­தில் உயி­ரு­டற்­சே­தம் எது­வும் ஏற்­பட்­ட­தா­கத் தக­வல் இல்லை. எனி­னும், அதி­கா­ரி­கள் எச்­ச­ரிக்கை நிலையை ஒரு­படி உயர்த்­தி­னர்.

சமூக ஊட­கங்­களில் வெளி­யான புகைப்­ப­டங்­கள், எரி­மலை­யைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் சாம்­பல் சூழ்ந்­தி­ருந்­த­தைக் காட்­டின.

பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் துப்­பு­ர­வுப் பணி­களை மேற்­கொள்ள தீய­ணைப்பு வாக­னங்­கள் சில­வற்றை அதி­கா­ரி­கள் அனுப்பி வைத்­த­னர். சாலை­களில் படிந்த சாம்­பலை அகற்ற குடி­யிருப்­பா­ளர்­கள் உத­வி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!