விளையாட்டுத் துளிகள்

இங்கிலாந்தை மீட்ட கேன்

மியூனிக்: 'யுயேஃபா நேஷன்ஸ் லீக்' காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்துள்ளது.

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கி தோல்வியின் விளிம்பிலிருந்து இங்கிலாந்தைக் காப்பாற்றினார் அணித் தலைவர் ஹேரி கேன். ஐரோப்பிய தேசிய காற்பந்து அணிகளுக்கான இப்போட்டியில் முந்தைய ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக இங்கிலாந்து ஹங்கேரியிடம் தோல்வியடைந்தது.

சென்ற ஆண்டு நடைபெற்ற யூரோ 2020 காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் ஜெர்மனியை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது இங்கிலாந்து.

மீண்டும் உலகக் கிண்ணத்துக்குக் குறிவைக்கும் ஆஸ்திரேலியா

அல்-ரயான்: தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெறும் இலக்கைக் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளை 2-1 எனும் கோல் கணக்கில் வென்று ஆஸ்திரேலியா உலகக் கிண்ணப் போட்டிக்கான 'பிளேயாஃப்' சுற்றுக்குத் தகுதிபெற்றது. விறுவிறுப்பான அந்த ஆட்டத்திற்குப் பிறகு இனி இம்மாதம் 13ஆம் தேதியன்று அந்த அணி 'பிளேயாஃப்' சுற்றில் லத்தீன் அமெரிக்க அணியான பெருவைச் சந்திக்கும். அந்தச் சுற்றை வெல்லும் அணி இவ்வாண்டு இறுதியில் கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறும்.

உலகச் சாதனை படைத்த சிங்கப்பூர் வீராங்கனை

சிங்கப்பூர்: உலக 'பவர்லிஃப்ட்டிங்' எடை தூக்கும் போட்டியில் சாதனை புரிந்துள்ளார் சிங்கப்பூர் வீராங்கனை ஃபர்ஹானா ஃபாரிட் (படம்: உலக 'பவர்லிஃப்ட்டிங்' சம்மேளனம் / ஃபேஸ்புக்). 52 கிலோகிராமுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 200.5 கிலோகிராம் எடையைத் தூக்கினார் ஃபர்ஹானா.

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் சன் சிட்டி நகரில் நடைபெற்ற போட்டியில் அவர் புதிய உலகச் சாதனையைப் படைத்தார்.

பிரான்சின் நொவெமி அல்லபெர்ட் 192.5 கிலோகிராம் எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தில் வந்தார். அவரின் சக நாட்டவரான ஷிஸுக்கா ரிக்கோ மூன்றாவதாக வந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!