கஞ்சா செடிகளை வளர்க்க 150,000 பேர் விண்ணப்பம்

பேங்­காக்: கஞ்­சா­வைப் பயன்­ப­டுத்­து­வது குற்­ற­மா­காது என்று தாய்­லாந்து அறி­வித்­ததை அடுத்து, அச்­செ­டியை வளர்க்க அனு­மதி கேட்டு அந்­நாட்­டில் 150,000க்கும் மேற்பட்டோர் விண்­ணப்­பம் செய்­துள்­ள­னர்.

ஆசி­யா­வி­லேயே தாய்­லாந்து மட்­டுமே கஞ்சா பயன்­பாட்­டுக்­குப் பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ளது.

உண­வ­கங்­களில் கஞ்­சாவை பயன்­ப­டுத்த தாய்­லாந்­தில் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே நேரத்­தில் அந்த தயா­ரிப்­பு­களில் டெட்­ரா­ஹைட்­ரோ­கன்­னா­பி­னோல் 0.2 விழுக்காட்டிற்கும் குறை­வாக இருக்க வேண்­டும் என உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

வர்த்­த­கம் மற்­றும் மருத்­துவ பயன்­பாட்­டிற்­காக தாய்­லாந்து அரசு கஞ்­சா­வைப் பயன்­ப­டுத்த அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

"பொரு­ளி­யல் வளர்ச்­சி­யைக் கருத்­தில் கொண்டு கஞ்சா பயன்­பாட்­டுக்­கும் கஞ்சா செடியை வளர்ப்­ப­தற்­கும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதேநேரத்­தில் பொது­வெ­ளி­யில் கொண்­டாட்­டத்­திற்­காக கஞ்­சாவை பயன்­ப­டுத்தி அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்­டால் கடு­மை­யான தண்­டனை விதிக்­கப்­படும். இது போன்­ற­வற்றைக் கட்­டுப்­ப­டுத்­தும் சட்­டத்­தின்­கீழ் விதி­மு­றை­கள் தொடர்ந்து நடை­மு­றை­யில் உள்­ளன" என தாய்­லாந்­தின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

ஏற்­கெனவே கனடா, உரு­குவே போன்ற நாடு­களில் கஞ்­சா­வுக்கு சட்டபூர்வமாக அனு­மதி வழங்கப் பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!