ஜி7 நாடுகளின் $600 பி. திட்டம்

வாஷிங்­டன்: சீனா­வின் பல நாடு­களை உள்­ள­டக்­கும் பொரு­ளி­யல் பாதைக்­குப் போட்­டி­யாக வள­ரும் நாடு­க­ளுக்கு 600 பில்­லி­யன் டாலர் திட்­டத்தை ‘ஜி7’ தலை­வர்­கள் வெளி­யிட்­டுள்­ள­னர். உல­க­ளா­விய தள­வாட மற்­றும் முத­லீட்டு பங்­கா­ளித்­து­வம் என்ற அத்­திட்­டத்­திற்கு 600 பில்­லி­யன் டாலர் திரட்­டப்­படும்.

இத்­திட்­டம் அனை­வ­ருக்­கும் பல­னிக்­கும் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் தெரி­வித்­தார்.

சீனா­வின் பல டிரில்­லி­யன் டாலர் பொரு­ளியல் பாதைத் திட்­டம், அதில் பங்­கேற்­கும் நாடு­களை அதிக கடன்­களில் சிக்க வைத்து விடுகிறது என்று குறை­கூ­றப்­ப­டு­கிறது.

“நான் தெளி­வா­கச் சொல்ல விரும்­பு­கி­றேன். இது, உத­வியோ, அறப்­ப­ணியோ அல்ல. ஆனால் அனை­வ­ருக்­கும் பலன் அளிக்­கும் ஒரு முத­லீட்­டுத் திட்­டம்,” என்று ஜோ பைடன் குறிப்­பிட்­டார்.

“ஜனநாயக நாடுகளுடன் கூட்டு சேர்வதால் ஆக்ககரமான பலன் களை கண்கூடாகக் காணலாம்,” என்றார் அவர்.

இத்திட்டத்தின்படி நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தளவாடத் திட்டங்களைத் தொடங்க அடுத்த ஐந்து ஆண்டு களில் ‘ஜி7’ தலைவர்கள் 600 பில் லியன் டாலரை திரட்டுவார்கள்.

இதில் மானியம், மத்திய அர சாங்க நிதி, தனியார் முதலீடுகளின் மூலம் 200 பில்லியன் டாலர் நிதி யைத் திரட்ட அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. அதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகள் மேலும் 300 பில்லியன் யூேராவை திரட்டப்போவ தாக அறிவித்துள்ளன.

பருவநிலை மாற்றத்தை சமாளிப்பது, உலகளாவிய சுகாதாரத்தை மேம் படுத்துவது, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவது, மின்னிலக்க தளவாட வசதிகளை உருவாக்குவது உள்ளிட்டவை திட்டத்தின் நோக்க மாகும்.

இதற்கிடையே உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி ‘ஜி7’ காணொளி வழியாக மாநாட்டில் உரையாற்றுவார் எனத் தெரிகிறது.

அப்போது ‘ஜி7’ நாடுகளிடம் அவர் கூடுதல் உதவிகளுக்கு கோரிக்கை விடுப்பார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!