மிக அரிய இரண்டு தலைப் பாம்பு கண்டெடுக்கப்பட்டது

மிகவும் அரிதான இரண்டு தலைப் பாம்பு ஒன்று தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாம்புகளைக் காப்பாற்றும் நிக் ஈவன்ஸ் என்பவர் ஃபேஸ்புக்கில் அது குறித்து பதிவிட்டார்.

டர்பன் நகருக்கு வெளியே தனது வீட்டுத் தோட்டத்தில் பாம்பு ஊர்ந்து சென்றதைப் பார்த்த ஒருவர், பாம்பை எடுத்துச் செல்லும்படி தன்னிடம் கேட்டுக்கொண்டதாக திரு ஈவன்ஸ் கூறினார்.

'சவுத்தர்ன் பிரௌன் எக் ஈட்டர்' எனும் அந்த முட்டைத் தின்னிப் பாம்பு மிக அரிய வகையைச் சேர்ந்தது.

30 செண்டிமீட்டர் நீளமுள்ள இந்தச் சிறிய பாம்பு ஆபத்தானது இல்லை.

தாம் கண்ட இந்த பாம்பு, உருக்குலைந்தது என்று அவர் வருணித்தார்.

அந்த இளம் பாம்பு நகர்வதைப் பார்க்கவே சுவாரசியமாக இருந்தது என்று திரு ஈவன்ஸ் குறிப்பிட்டார்.

சில நேரங்களில் பாம்பின் இரண்டு தலைகளும் எதிர் எதிர் திசைகளில் சென்றன. சில நேரங்களில் ஒரு தலையின்மீது மற்றொரு தலையை வைத்தபடி பாம்பு நகர்ந்தது என்றார் அவர்.

அரிதான அந்த பாம்பை தற்போது நிபுணர்கள் பராமரித்து வருகின்றனர்.

ஆனால் இந்த பாம்பு இவ்வளவு நாள் வாழ்ந்ததே ஆச்சரியம்தான் என்ற அவர், பாம்பைக் காட்டில் விடுவதில் பயன் இல்லை என்றார்.

இந்தப் பாம்பைக் காட்டில் விட்டால் அது சீக்கிரம் இறந்துவிடும் என்று திரு ஈவன்ஸ் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!