பல்லாயிரம் வெளிநாட்டு ஊழியர்கள் குவிந்தனர்

கோலா­லம்­பூர்: சட்­ட­வி­ரோதக் குடி­யே­றி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் சிக்­கா­மல் கெடு காலத்­திற்குள் மலே­சி­யாவைவிட்டு வெளி­யேற ஏரா­ள­மான வெளி­நாட்­டி­னர் முயன்ற­னர்.

இத­னால் நாட்­டின் முக்­கிய விமான நிலை­யங்­கள் மற்­றும் படகு முனை­யங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கில் அவர்­கள் குவிந்­ததாக 'த ஸ்டார்' இணை­யச் செய்தி கூறி­யது.

சிப்­பாங்­கில் உள்ள கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்­தின் பய­ணி­கள் புறப்­பாட்டு முகப்பு கூட்­டத்­தால் நிரம்பி வழி­வ­தால் அங்­கி­ருக்­கும் கார் நிறுத்­தப் பகு­தி­க­ளில்­கூட பல வெளி­நாட்­டி­னர் படுத்து உறங்­கி­ய­தாக அச்­செய்தி தெரி­வித்­தது.

பெருங்­கூட்­டத்­தைச் சமா­ளிக்க இய­லா­மல் விமான நிலைய ஊழி­யர்­கள் தவிப்­ப­தால், தாங்­கள் பய­ணச்­சீட்டு எடுத்த விமா­னத்­தில் பய­ணம் செய்ய இயலா நிலை நூற்­றுக்­க­ணக்­கா­னோ­ருக்கு ஏற்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர் மறு­சீ­ர­மைப்­புத் திட்­டத்­தின் கெடு முடி­வ­தற்­குள் இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த சட்­ட­வி­ரோத ஊழி­யர்­கள் வேக­மாக வெளி­யே­றிச் செல்­வதை ஜோகூர் பாரு­வி­லும் காண முடிந்­தது. அங்­குள்ள ஸ்து­லாங் லாவத் படகு முனை­யத்­தில் நேற்று முன்­தி­னம் ஏரா­ள­மா­னோர் குவிந்­தி­ருந்­த­னர்.

அவர்­களில் ஒரு­வ­ரான ஆஃப்னி ஜுவானா ஹர்­ஃபார், 23, என்­ப­வரை செய்­தி­யா­ளர்­கள் பேட்டி கண்­ட­னர்.

துப்­பு­ர­வுத் தொழி­லா­ளி­யாக பத்து ஆண்டு காலத்­திற்கு மேலாக மலே­சி­யா­வில் தமது குடும்­பத்­து­டன் தங்கி வேலை செய்­த­தாக அந்­தப் பெண் கூறி­னார்.

தமது பெற்­றோர் ஏற்­கெ­னவே மலே­சி­யா­வை­விட்டு வெளி­யே­றி­விட்ட நிலை­யில் தற்­போது தாமும் இந்­தோ­னீ­சி­யா­வுக்­குத் திரும்­பிச் சென்று கொண்டு இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

தொழிற்­சா­லை­யில் வேலை செய்த ராணி, 40, என்­ப­வர் பாத்­தா­மில் உள்ள கெரிஞ்சி என்­னும் தமது சொந்த ஊருக்­குத் திரும்­பிச் செல்­வ­தா­கக் கூறி­னார்.

மாதம் 1,000 ரிங்­கிட் (S$318) சம்­ப­ளம் வாங்கி வந்­த­தா­க­வும் அது தமது செல­வுக்­குப் போத­வில்லை என்­றும் கூறிய அவர், மலே­சி­யா­வுக்­குத் திரும்பி வரும் எண்­ணம் இல்லை என்­றார்.

வெளி­நாட்டு ஊழி­யர் மறு­சீ­ர­மைப்­புத் திட்­டம் 2020 நவம்­பர் மாதம் நடப்­புக்கு வந்­தது. சட்­ட­

வி­ரோ­த­மாக மலே­சி­யா­வில் தங்கி இருப்­போர் சொந்த விருப்­பப்­படி வெளி­யேற இத்­திட்­டம் அனு­மதி அளித்­தது. கடந்த ஆண்டு ஜூன் 30 வரை இதற்கு காலக்­கெடு விதிக்­கப்­பட்ட நிலை­யில், கொள்ளை­ நோய் கார­ண­மாக கெடு ஓராண்­டுக்கு நீட்­டிக்­கப்­பட்­டது. அதன்­படி, நேற்று முன்­தி­னத்­து­டன் (ஜூன் 30) அது முடிந்­துவிட்டது.

கெடு முடிவதற்குள் மலேசியாவிலிருந்து அவசரமாக வெளியேற முண்டியடித்த கூட்டம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!