குடியிருப்புக் கட்டடம்மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: குழந்தை உட்பட 18 பேர் பலி

கீவ்: உக்­ரே­னின் தென்­ப­கு­தி­யில் அமைந்­துள்ள ஒடெசா வட்­டா­ரத்­தில் ரஷ்யா நேற்று முன்­தி­னம் இரவு நடத்­திய ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­களில் ஒரு குழந்தை உட்­பட 18 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

செர்­கி­யிவ்கா எனும் சிற்­றூ­ரில் உள்ள ஒன்­பது தளக் குடி­யி­ருப்­பு­மீது தொடுக்­கப்­பட்ட ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் 16 பேர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் 30 பேர் காய­முற்­ற­தா­க­வும் உக்­ரேன் அர­சாங்­கத்­தின் அவ­ச­ர­கால சேவை­யான 'டிஎஸ்­என்­எஸ்' தெரி­வித்­தது.

அதே ஊரில் அமைந்­துள்ள கேளிக்கை மையத்­தின்­மீது நடத்­தப்­பட்ட இன்­னொரு தாக்­கு­த­லில் குழந்தை உட்­பட இரு­வர் உயி­ரி­ழந்­த­னர்.

கடந்த சில நாள்­க­ளாக உக்­ரே­னிய நக­ரங்­கள்­மீது ரஷ்யா பல­முறை ஏவு­க­ணைத் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், உள்­ளூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் இரவு 1 மணி­ய­ள­வில் ரஷ்ய ஏவு­க­ணை­கள் செர்­கி­யிவ்­கா­வைத் தாக்­கி­ய­தாக டிஎஸ்­என்­எஸ் கூறி­யது.

முத­லில் தாக்­கு­த­லுக்­குள்­ளான ஒன்­பது தளக் குடி­யி­ருப்­பில் இடி­பா­டு­க­ளுக்கு இடையே எவ­ரே­னும் உயி­ரோடு இருக்­கி­றார்­களா என்­ப­தைத் தீய­ணைப்­புத்­து­றை­யி­னர் தேடும் படத்தை அது வெளி­யிட்­டது.

கருங்­க­ட­லுக்கு மேலே பறந்த ரஷ்ய விமா­னங்­களில் இருந்து அந்த ஏவு­க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­ட­தாக ஒடெசா வட்­டார நிர்­வா­கத்­தின் பேச்­சா­ளர் செர்கி பிராட்­சுக் சொன்­னார்.

இந்த இர­வு­நே­ரத் தாக்­கு­த­லுக்கு முன்­னாள் சோவி­யத் காலத்­தைச் சேர்ந்த எக்ஸ்22 வகை ஏவு­க­ணை­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­லாம் என்று நம்­பப்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

இத்­தாக்­கு­தல் தொடர்­பில் ரஷ்யா இது­வரை எது­வும் கூறவில்லை.

முன்­ன­தாக, உத்­தி­பூர்­வ­மாக முக்­கி­ய­மெ­னக் கரு­தப்­படும் பாம்­புத் தீவில் இருந்து ரஷ்யா தனது படை­களை விலக்­கிக்­கொண்­டது ஒடேசா துறை­மு­கத்­திற்­கும் அத­னை­யொட்­டிய பகு­தி­க­ளுக்­கு­மான அச்­சு­றுத்­த­லைத் தணிக்­கும் என்று உக்­ரேன் நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!