இந்தோனீசியா-அரபு நாடுகள் இடையே வர்த்தக உடன்பாடு

அபு­தாபி: இந்­தோ­னீ­சியா, ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள் ஆகிய நாடு­க­ளி­டையே பொரு­ளா­தார உறவை வலுப்­ப­டுத்­தும் வகை­யில் வர்த்­தக உடன்­பா­டு­கள் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளன.

இதன் மூலம் இரு நாடு­க­ளி­டையே ஏற்­று­மதி செய்­யப்­படும் பொருள்­க­ளுக்­கான வரி­கள் பெரு­மளவு குறை­யும், சில­வற்­றுக்கு வரி இல்­லா­ம­லும் போகும்.

இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வின் ஐக்­கிய அரபு சிற்­ற­ரசு பய­ணத்­தின்­போது இந்த ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின.

இந்­தோ­னீ­சி­யா­வின் செம்­பனை எண்­ணெய், உண­வுப் பொருள்­கள், ஆடை அலங்­கா­ரப் பொருள்­கள், சிற்­ற­ர­சின் பெட்­ரோ­கெ­மிக்­கல், ரப்­பர், பிளாஸ்­டிக், எஃகு துறை­கள் ஆகி­யவை இத­னால் பல­ன­டை­யும் என்று ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சின் பொரு­ளா­தார அமைச்சு கூறி­யது.

இரு­த­ரப்பு எண்­ணெய் சாரா வர்த்­த­கம் ஐந்­தாண்­டு­களில் 10 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக அதி­க­ரிக்­கும் என்று சிற்­ற­ர­சு­க­ளின் பொரு­ளா­தார அமைச்­சர் அப்­துல்லா சொன்­னார். இது கடந்த ஆண்டு கிட்­டத்­தட்ட 3 பில்­லி­யன் டால­ராக இருந்­தது.

சேவை­கள், முத­லீ­டு­கள், அறி­வு­ சார் சொத்­து­ரி­மை­கள், ஹலால் சான்­றி­தழை ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் அங்­கீ­க­ரிப்­பது ஆகி­ய­வை­யும் இந்த ஒப்­பந்­தங்­களில் அடங்­கும் என்று இந்­தோ­னீ­சிய வர்த்­தக அமைச்சு சொன்­னது.

இத­னைத் தொடர்ந்து இந்­தோ­னீ­சி­யா­வில் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சின் முத­லீ­டு­கள் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்ப்­ப­தாக அதன் வர்த்­தக அமைச்­சர் ஹாசன் கூறி­னார்.

பத்­தாண்­டு­களில் தமது பொரு­ளா­தா­ரத்தை இரட்­டிப்­பாக்­கத் திட்­ட­மிட்­டுள்ள ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள் ஏற்­கெ­னவே இஸ்­ரேல், இந்­தி­யா­வு­டன் இது­போன்ற ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்­டுள்­ளது.

சமை­யல் எண்­ணெய் ஏற்­று­மதி அதி­க­ரிப்பு

செம்­பனை எண்­ணெய் ஏற்­று­மதி அளவை இந்­தோ­னீ­சியா அதி­க­ரிக்­கிறது.

இந்­தோ­னீ­சிய நிறு­வ­னங்­கள் உள்­நாட்­டில் விற்ற செம்­பனை எண்­ணெய் அள­வைப் போல் ஏழு மடங்கு அதி­க­மாக ஏற்­று­மதி செய்­ய­லாம் என்று கூறப்­பட்­டுள்­ளது. முன்பு இது ஐந்து மடங்­காக இருந்­தது.

இத­னால், செம்­பனை பழங்­கள் வாங்­கப்­ப­டு­வது அதி­க­ரித்து, விவ­சா­யி­கள் பல­ன­டை­வார்­கள் என்று அர­சாங்­கம் சொன்­னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!