மனித உடலில் கலந்துவிட்ட பிளாஸ்டிக் நுண் துகள்கள்

கராச்சி: கடலின் அடி ஆழம் முதல் உயர்ந்து நிற்கும் மலை உச்சி வரை பிளாஸ்டிக் குப்பை பரவியுள்ளது.

அந்த பிளாஸ்டிக்கின் நுண் துகள்கள் தற்போது மனித உடல்களிலும் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நுரையீரல், மண்ணீரல், சிறுநீரகம் மட்டுமல்லாமல் கருவில் இருக்கும் சிசுவுக்கு உயிர்நாடியான நஞ்சுக்கொடியிலும் பிளாஸ்டிக்கின் நுண் துகள்கள் இருப்பதை ஆய்வுகள் காட்டுவதாக பிரான்ஸ் ஆய்வக ஆராய்ச்சியாளரான ஜீன் ஃபிரான்கோஸ் கூறியுள்ளார்.

மனித உறுப்புகளில் கலந்துள்ள பிளாஸ்டிக் துகள்கள் பிற்காலத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராயப்படுகிறது. நஞ்சுக் கொடியில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் சிசுவின் வளர்ச்சியைப் பாதிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

காற்றில் உள்ள இந்த நுண்ணிய துகள்கள் சுவாசிப்பதன் மூலம் மனித உடலுக்குள் செல்வதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, செயற்கை துணிகளில் உள்ள ‘மைக்ரோஃபைர்’ காற்றில் கலந்துள்ளதாகவும் அவை நுரையீரலில் காணப்படுவ தாகவும் ஆய்வு கூறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!