‘ஷங்காய் காவல்துறை தரவுத்தளம் ஊடுருவல்’

ஷங்­காய்: சீனா­வில் பில்­லி­யன் கணக்­கான குடி­மக்­க­ளின் தக­வல்­க­ளைத் திரு­டி­யுள்­ள­தாக அடை­யாளம் தெரி­யாத இணைய ஊடு­ரு­வி­கள் கூறி­யுள்­ள­னர். ஷங்­காய் நக­ர காவல்­து­றை­யின் தகவல் தர­வுத்­தளத்தை ஊடு­ருவி அவ்­வாறு செய்­ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்­தச் செயல், சீனா­வின் வர­லாற்­றில் இடம்­பெற்­றுள்ள ஆக மோச­மான இணை­யப் பாது­காப்பு மீறல் சம்­ப­வம் என்று வல்­லு­நர்­கள் சொல்கின்றனர்.

இச்­செ­ய­லைப் புரிந்­த­தா­கக் கரு­த­ப்படுப­வர்­கள், திரு­டிய 23 டெரா­பைட்­டுக்­கும் அதி­க­மான அளவு தக­வல்­களை விற்க முன்­வந்­துள்­ள­னர். பல­ரின் பெயர்­கள், முக­வ­ரி­கள், பிறந்த இடம், தேசிய அடை­யாள எண்­கள், தொலை­பேசி எண்­கள், குற்­ற­வா­ளி­க­ளுக்­கான அடை­யாள எண்­கள் உள்­ளிட்­டவை திரு­டப்­பட்ட தக­வல்­களில் அடங்கு­வதா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

ஊடு­ரு­வி­கள் சிலர் குழு­வாக இதைப் புரிந்­தி­ருக்­க­லாம் அல்­லது இது ஒரு தனி­ந­ப­ரின் வேலை­யா­க­இருக்­க­லாம் என்று நம்­பப்­ப­டு­கிறது.

தக­வல்­களை விற்க 10 'பிட்­காய்ன்' மின்­னி­லக்க காசுகளை வழங்­கு­மாறு ஊடு­ரு­வி­கள் கேட்டுக்­கொண்­ட­தாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் 200,000 டாலர்.

இச்­சம்­ப­வம் சீனா­வின் பாது­காப்பு துறையினரிடையே அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதனால் இந்­தச் செய­லின் நம்­ப­கத்­தன்மை குறித்த கேள்­வி­கள் எழுந்­ததுடன் இது எவ்­வாறு மேற்­கொள்­ளப்­பட்டி­ருக்­கும் என்ற ஐயமும் நில­வு­கிறது.

ஆசிய நாடு ஒன்­றில் பில்­லி­யன் கணக்­கான குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் தக­வல்­கள் ஊடு­ரு­வப்­பட்­டதை மின்­னி­லக்க நாணய பங்­குச் சந்தையான 'பைனான்ஸ்' அறிந்ததென அதன் தலைமை நிர்­வாக அதி­காரி சாவ் சாங்­பெங் நேற்று டுவிட்­ட­ரில் தெரி­வித்­தி­ருந்­தார். பாதிக்கப்பட்ட நாடு எது அவர் குறிப்­பி­ட­வில்லை.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி இச்­சம்­ப­வம் குறித்து ஷாங்­காய் நக­ரின் அதி­கா­ரி­கள் கருத்து தெரி­விக்­க­வில்லை. சீனா­வின் இணை­யத்­தளத்­தைக் கண்­கா­ணிக்­கும் அமைப்பு, காவல்­துறை ஆகி­ய­வை­யும் எந்­தக் கருத்­தும் வெளி­யி­ட­வில்லை.

சீனா­வில் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் இணை­யக் குற்­ற­வாளி­கள் இருப்­ப­தாக அமெ­ரிக்கா உள்­ளிட்ட பல நாடு­கள் கூறி வந்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!