‘சுற்றுப்பயணிகளை ஈர்க்க சலுகை வேண்டாம்’

பேங்­காக்: சுற்­றுப்­ப­ய­ணி­களை ஈர்க்க தாய்­லாந்­தில் உள்ள ஹோட்­டல்­கள், வர்த்­த­கங்­கள், தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் பெரிய அள­வில் சலு­கை­கள் வழங்­கு­வ­தைத் தவிர்க்­க­வேண்­டும் என்று அந்­நாட்­டின் அமைச்­சர்­கள் கூறி­யுள்­ள­னர். அதற்­குப் பதி­லாக உயர்­தர சுற்றுலாத் தலம் என்ற தாய்­லாந்­தின் நற்­பெ­ய­ருக்கு மெரு­கூட்­டு­வ­தில் கவ­னம் செலுத்­த­வேண்­டும் என்று அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

இவ்­வாண்­டின் முற்­பா­தி­யில் தாய்­லாந்­துக்கு சுமார் இரண்டு மில்­லி­யன் வெளி­நாட்­டி­னர் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­ட­னர். அந்­நாட்­டின் சுற்­றுப்­ப­ய­ணத் துறை நன்கு மீண்டு வரு­வ­தற்கு இது ஓர் அறி­கு­றி­.

கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லால் தாய்­லாந்­தின் சுற்­றுப்­பயணத் துறை சீர்­கு­லைந்­து­போனது. அந்­தக் கால­கட்­டத்­தில் அந்­நாட்­டிற்­குப் பய­ணம் மேற்­கொள்­வதற்­கான விதி­மு­றை­கள் கடு­மை­யாக இருந்­த­து­டன் பய­ணி­கள் அதி­கம் செலவு செய்­ய­வும் வேண்­டி­யி­ருந்­தது.

மலி­வாக இருக்­கிறது என்­ப­தற்­காக மட்­டும் பய­ணி­கள் தாய்­லாந்­துக்கு வரக்­கூ­டாது; அவர்­கள் விருப்­பம் கொண்டு வருகை தர­வேண்­டும் என்று தாய்­லாந்­தின் துணைப் பிர­த­மர் அனுட்­டின் சாய்ர்ன்­வி­ராக்­குல் சுற்­றுப்­ப­யண நிகழ்ச்சி ஒன்­றில் பேசி­ய­போது குறிப்­பிட்­டார். இதன் தொடர்­பில் அந்­நாட்­டின் சுற்­றுப்­ப­யண அமைச்­சரின் கருத்­து­க­ளையே அவ­ரும் முன்­வைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!