அறுவரைக் கொன்ற சந்தேக ஆடவர் கைது

அமெரிக்காவின் சிகாகோ நகரில் துப்பாக்கிச்சூடு

ஹைலேண்ட் பார்க்: அமெ­ரிக்­கா­வின் சிகாகோ நக­ரில் நேற்று முன்­தி­னம் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்­டில் குறைந்­தது ஆறு பேர் மாண்­ட­னர். இதில் 36க்கும் அதி­க­மா­னோர் காய­ம­டைந்­த­னர்.

அவர்­களில் பெரும்­பா­லோ­ருக்கு துப்­பாக்­கிச்­சூட்­டுக் காயங்­கள் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அமெ­ரிக்­கா­வின் சுதந்­திர தின அணி­வ­குப்பு நிகழ்ச்சி ஒன்­றில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. ஜூலை 4ஆம் தேதி அமெ­ரிக்­கா­வின் சுதந்­திர தினம்.

தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 22 வயது ஆட­வ­ரைக் காவல்­து­றை­யி­னர் கைது­செய்­துள்­ள­னர்.

சந்­தேக நப­ரான ராபர்ட் இ. கிரிமோ ஓட்­டிக்­கொண்­டி­ருந்த வாக­னத்­தைக் காவல்­து­றை­யி­னர் சுற்றி வளைத்­தது 'ஏபிசி' ஊட­கம் வெளி­யிட்ட காணொ­ளி­யில் பதி­வா­கி­யி­ருந்­தது.

கைகளை உயர்த்­தி­ய­படி கிரிமோ வாக­னத்­தி­லி­ருந்து வெளியே வந்­தது தெரிந்­தது. தரை­யில் படுத்த அவ­ரைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்து தடுப்­புக்­கா­வ­லில் வைத்­த­னர்.

அவர் மீது குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­படும் என்று காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

துப்­பாக்­கிச்­சூட்­டில் உயி­ரி­ழந்­த­வர்­களில் 76 வயது நிக்­க­லஸ் டொலெடோ என்­ப­வ­ரும் ஒரு­வர் என்று நியூ­யார்க் டைம்ஸ் தெரி­வித்­தது. சக்­கர நாற்­கா­லி­யில் இருந்த அவர், அணி­வ­குப்­பைப் பார்­வை­யிட விரும்­ப­வில்லை. எனி­னும், அவ­ரு­டைய குடும்­பத்­தி­னர் நிகழ்ச்­சி­யைக் காண விரும்­பி­ய­தால், குடும்ப உறுப்­பி­னர் ஒரு­வ­ரு­டன் அவர் இருக்க வேண்­டி­யி­ருந்­தது.

உயி­ரி­ழந்­த­வர்­களில் குறைந்­தது ஒரு­வ­ரா­வது மெக்­சிகோ நாட்­ட­வராக இருந்­தார் என்று மெக்­சிகோ வெளி­யு­றவு அமைச்­சைச் சேர்ந்த மூத்த அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

நேற்று முன்­தி­னம் உள்­ளூர் நேரப்­படி காலை 10.14 மணிக்கு (சிங்­கப்­பூர் நேரப்படி இரவு 11.14 மணி) துப்­பாக்­கிச்­சூடு தொடங்­கி­ய­தாக காவல்­துறை அதி­கா­ரி­கள் கூறி­னர். அப்­போது சுதந்திர தின அணி­வ­குப்பு முக்­கால்­வாசி முடிந்து­விட்­டது.

அமெ­ரிக்­கா­வில் துப்­பாக்கி வன்­முறைச் சம்பவங்கள் தலை­வி­ரித்து ஆடு­கின்றன. துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வங்­க­ளால் ஆண்­டு­தோ­றும் 40,000 உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­ப­டு­கின்­றன என்று துப்­பாக்கி வன்­முறை காப்­பக இணை­யப் பக்­கம் குறிப்­பி­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!