சீனாவுடனான மோதலுக்குத் தீர்வுகாண வழிகளைக் கண்டறிவேன்: பிலிப்பீன்ஸ் அதிபர்

மணிலா: சீனா உட­னான மோத­லுக்­குத் தீர்­வு­காண வழி­க­ளைத் தாம் கண்­ட­றிய இருப்­ப­தாக பிலிப்­பீன்ஸ் அதி­பர் ஃபெர்டி­னாண்ட் மார்­கோஸ் ஜூனி­யர் கூறி­யுள்­ளார். சீன வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யியை சந்­திக்­க­வுள்ள வேளை­யில் அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.

சீனா உட­னான தன் நாட்­டின் உறவு, தென்சீனக் கடல் விவ­கா­ரத்­துக்கு அப்­பாற்­பட்டு இருக்க வேண்­டும் என தாம் விரும்­பு­வதாக திரு மார்­கோஸ் ஜூனி­யர் சொன்­னார். சீனா­வுக்­கும் பிலிப்­பீன்­சுக்­கும் இடை­யி­லான உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்த அவர் விரும்­பு­கி­றார்.

தென்சீனக் கட­லின் கிட்­டத்­தட்ட அனைத்­துப் பகு­தி­க­ளுக்­கும் சீனா உரிமை கோரு­கிறது.

2016ஆம் ஆண்டில் நெதர்­லாந்­தின் தி ஹேக் நக­ரில் உள்ள அனைத்­து­லக தீர்ப்­பா­யம் பிலிப்­பீன்­சுக்கு ஆத­ர­வாக தீர்ப்­பளித்து, சீனா­வின் கோரிக்­கை­க­ளைத் தள்­ளு­படி செய்­தது.

அந்­தத் தீர்ப்பை தாம் நிலை­நாட்ட இருப்­ப­தா­கக் கூறிய திரு மார்­கோஸ் ஜூனி­யர், உறு­தி­யான தொனி­யு­டன் சீனா­வு­டன் தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்த தாம் தயா­ராக இருப்­ப­தா­க­வும் சொன்­னார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங்கை திரு மார்கோஸ் ஜூனியர் இன்று சந்திக்கவுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!