கொவிட்-19: ஜகார்த்தாவில் இரண்டாம் நிலை கட்டுப்பாடு

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம், தலை­ந­கர் ஜகார்த்­தா­வில் பொது நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­களை இரண்­டாம் நிலைக்கு நேற்று உயர்த்­தி­யது.

அங்கு கொவிட்-19 பர­வல் அதி­க­ரித்­துள்­ள­தைத் தொடர்ந்து இந்த நட­வடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 1,434 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

ஜகார்த்­தா­வின் போகோர், டெபோக், தங்­கெ­ராங், பெகாசி உள்­ளிட்ட பகு­தி­களில் இரண்­டாம் நிலை கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டு உள்­ளது.

"பிஏ.4, பிஏ.5 வகை ஓமிக்­ரான் துணைத் திரிபு பர­வ­லால் கொவிட்-19 தொற்று அதி­க­ரித்து வரு­வதை நாங்­கள் கவ­னிக்­கி­றோம்," என்று இந்­தோ­னீ­சிய உள்­துறை அமைச்­சின் வட்­டார நிர்­வாக மேம்­பாட்­டுப் பிரிவு தலைமை இயக்­கு­நர் ஷ்ஃப்ரி­ஸால் தெரி­வித்­தார்.

இரண்­டாம் நிலை கொவிட்-19 கட்­டுப்­பாடு­களின்­கீழ் ஹோட்­டல்­கள், பேரங்­கா­டி­கள், உண­வ­கங்­கள், திரை­யரங்­கு­கள் அதி­க­பட்­சம் 75 விழுக்­காடு கொள்­ள­ள­வு­டன் இயங்­க­லாம். ஆனால், இரவு 9 மணிக்­கெல்­லாம் அவை மூடி­விட வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!