ரஷ்யாவுக்கு $24 பி. வருமானம்

பல பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிபொருளை வாங்கும் சீனா, இந்தியா

மாஸ்கோ: உக்­ரேன் மீது படை­யெ­டுத்­துள்ள ரஷ்­யா­வைத் தனி­மைப் படுத்­தும் முயற்­சி­களில் அமெ­ரிக்­கா­வும் மேற்­கத்­திய நாடு­களும் தொடர்ந்து ஈடு­பட்டு வரும் நிலை­யில் ஓசை­யில்­லா­மல் சீனா, இந்­தி­யா­வி­டம் எரி­பொ­ருளை விற்று ரஷ்யா 24 பில்­லி­யன் டாலர் வரு­மா­னத்தை ஈட்­டி­யுள்­ளது.

உக்­ரேனை ஊடு­ரு­விய மூன்றே மாதங்­களில் பெரும் தொகையை அது சம்­பாதித்­துள்­ளது. ரஷ்ய அதி பர் புட்­டி­னைத் தண்­டிக்­கும் அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­க­ளின் முயற்­சி­கள் எடு­ப­ட­வில்லை என்­ப­தையே இது காட்­டு­கிறது.

ரஷ்­யா­வின் எண்­ணெய், எரி­வாயு, நிலக்­கரி ஆகி­ய­வற்­றுக்­காக சீனா, மே மாதம் வரை­யி­லான மூன்று மாத காலக்­கட்­டத்­தில் 18.9 பில்­லி­யன் டாலரை செல­வ­ழித்­துள்­ளது. இது, ஓராண்­டுக்கு முந்­தைய காலக்­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இரண்டு மடங்கு என்று சுங்­கத் துறை புள்ளி விவ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

இதற்­கி­டையே இதே காலக்­கட்­டத்­தில் ரஷ்­யா­வின் எரி­பொ­ரு­ளுக்­காக 5.1 பில்­லி­யன் டாலரை இந்­தியா செல­விட்­டுள்­ளது. இது, ஓராண்­டுக்கு முந்­தையை நிலை யுடன் ஒப்­பி­டு­கை­யில் ஐந்து மடங்கு அதி­கம்.

அதா­வது 2021 இதே மாதங் களு­டன் ஒப்­பிட்­டால் ரஷ்யா இரு நாடு­க­ளி­ட­மி­ருந்து கூடு­த­லாக 13 பில்­லி­யன் டாலர் வரு­மா­னத்தை ஈட்­டி­யுள்­ளது.

போர் தொடுத்­துள்ள ரஷ்­யா­வைத் தண்­டிக்­கும் வகை­யில் அமெ­ரிக்­கா­வும் இதர நாடு­களும் அத­னி­ட­மி­ருந்து எரி­பொ­ருள் வாங்­கு­வதை நிறுத்­தியோ அல்­லது தாமப் ­ப­டுத்­தியோ உள்­ளன.

இத­னால் ரஷ்­யா­வி­லி­ருந்து எரி­பொ­ருள் குறைந்த அளவு கொள்­மு­தல் செய்­யப்­ப­டு­கிறது. ஆனால் இதனை ஈடு­கட்­டும் அள­வுக்கு சீனா, இந்­தியா ஆகிய இரு நாடு களி­லி­ருந்து ரஷ்யா கூடு­த­லாக வருமானத்தை ஈட்­டி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் ரஷ்யா மீது விதிக்­கப்­பட்ட தடை­க­ளால் உல­க­ளா­விய எரி­பொ­ருள் விலை அதி­க­ரித்து பண­வீக்­கத்­துக்கு வழி வகுத்­துள்­ளது. பெரிய பொரு­ளி­யல் நாடு களுக்கு பொரு­ளி­யல் மந்­தம் ஏற்­ப­டக்­கூ­டிய அச்­சத்தை கூட்­டி­யுள்­ளது.

"ரஷ்யா குழாய் மற்­றும் பசி­பிக் துறை­மு­கங்­கள் வழி­யாக ஏற்று மதிச் செய்­யக்­கூ­டிய அனைத்­தை­யும் சீனா வாங்கி வரு­கிறது," என்று எரி­பொ­ருள், தூய்­மை­யான காற்று ஆய்வு நிலை­யத்­தின் முன்­னணி பகுப்­பாய்­வா­ளர் லாவ்ரி மைலி­விர்டா தெரி­வித்­தார்.

போர் தொடங்­கி­ய­தி­லி­ருந்து ரஷ்­யா­வின் எரி­பொ­ருள் ஏற்­று ­மதியை அவர் கண்­கா­ணித்து வரு­கி­றார்.

ஐரோப்­பிய நாடு­கள் விரும்­பாத அட்­லாண்­டி­க் வட்டாரத்திலிருந்து ஏற்­று­மதி செய்­யப்­படும் சரக்­கு­களை வாங்­கும் முக்­கிய நாடாக இந்­தியா இருந்து வரு­கிறது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!