எஸ்.சுப்ரமணியம் மறைவு; இரங்கல்

கோலா­லம்­பூர்: மலே­சிய இந்­தி­யர் காங்­கி­ரசின் முன்­னாள் துணைத் தலை­வர் எஸ். சுப்­ர­ம­ணி­யம் மறை­வுக்கு மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் இரங்­கல் செய்தி வெளி­யிட்­டுள்­ளார்.

செவ்­வாய்க்­கி­ழமை இரவு சிலாங்­கூ­ரின் பெட்­டா­லிங் ஜெயா­வில் உள்ள தமது வீட்­டில் அவர் கால­மா­னார். தமது ஃபேஸ்புக் பதி­வில் தாமன்­சாரா, செகா­மட் தொகு­தி­க­ளின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சுப்­ர­ம­ணி­யம் நாட்­டுக்­குப் பெரும்­பங்கு ஆற்­றி­யி­ருப்­ப­தாக மலேசிய பிரதமர் இஸ் மாயில் சப்ரி யாக்கோப் குறிப்­பிட்­டுள்­ளார்.

"வேளாண், உள்­நாட்டு வர்த்­த­கம், வீட­மைப்பு உள்­ளிட்ட அமைச்­சு­களில் அவர் துணை அமைச்­ச­ரா­கப் பணி­யாற்­றி­யுள்­ளார்.

அவ­ரு­டைய குடும்­பத்­துக்கு என்­னு­டைய ஆழ்ந்த இரங்­க­லைத் தெரிவித்­துக் கொள்­கி­றேன்," என்று பிர­த­மர் தெரி­வித்­துள்­ளார்.

முன்­ன­தாக மலே­சிய மா மன்­ன­ரும் அவ­ரது துணை­வி­யா­ரும் மறைந்த எஸ். சுப்­ர­ம­ணி­யம் குடும்­பத்­தி­ன­ருக்கு அனுதாபம் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

2011ல் பக்­க­வா­தம் ஏற்­பட்ட பிறகு படுத்­தபடுக்­கை­யா­கக்கிடந்த எஸ். சுப்­ர­ம­ணி­யம், 78, செவ் வாய் இரவு எட்டு மணி­ய­ள­வில் தூக்­கத்­தில் கால­மா­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!