காற்பந்துத் துளிகள்

செல்சியில் சேரவுள்ள ஸ்டெர்லிங்

லண்டன்: இங்கிலாந்து காற்பந்து நட்சத்திரம் ரஹீம் ஸ்டெர்லிங் (படம்) இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணியான செல்சியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றொரு பிரிமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியில் ஸ்டெர்லிங் தற்போது விளையாடி வருகிறார். அந்த அணியில் சேர்ந்த பிறகு தொடக்கத்தில் மிகச் சிறப்பாக ஆடிய இவருக்குக் கடந்த சுமார் ஈராண்டுகளாக எதிர்பார்த்த அளவு விளையாட வாய்ப்பு கிட்டவில்லை.

சென்ற ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய தேசிய அணிகளுக்கான யூரோ 2020 போட்டியில் இங்கிலாந்து இறுதியாட்டம் வரை சென்றது. அந்த அணியில் மிகச் சிறப்பாக விளையாடியோரில் ஸ்டெர்லிங்கும் ஒருவர்.

லிவர்பூல் அணியில் ஓர் இளையராகத் தனது பயணத்தைத் தொடங்கினார் ஸ்டெர்லிங். இப்போது எதிர்பார்த்தபடி அவர் செல்சியில் சேர்ந்தால் இங்கிலாந்தின் மூன்று ஆகப் பெரிய அணிகளில் விளையாடிய பெருமையை ஸ்டெர்லிங் பெறுவார்.

பெண்கள் காற்பந்து, அமோக ஆதரவு

மான்செஸ்டர்: பெண்கள் ஐரோப்பிய தேசிய அணிகளுக்கான யூரோ 2022 காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் முதல் ஆட்டத்தில் வரலாறு காணாத அளவில் 69,000 ரசிகர்கள் 'ஓல்ட் ட்ராஃபர்ட்' விளையாட்டரங்கில் திரண்டனர். இப்போட்டியில் இதற்கு முன்பு ஓர் ஆட்டத்தில் 30,000 பேர் திரண்டதுதான் சாதனையாக இருந்தது.

இது பெண்கள் காற்பந்து கண்டுள்ள வளர்ச்சிக்கான சான்று என்று இங்கிலாந்தின் பயிற்றுவிப்பாளர் சிரீனா வீக்மன் கூறியுள்ளார். ஆட்டத்தில் ஆஸ்திரியாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது இங்கிலாந்து.

ரொனால்டோவை விற்கத்

தயாராகும் யுனைடெட்

மான்செஸ்டர்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவை வாங்க முன்வரும் அணிகள் எவ்வளவு தொகை செலுத்தத் தயாராய் இருக்கின்றன என்பதை அறிய அவரின் அணியான மான்செஸ்டர் யுனைடெட் ஆயத்தமாகிவருகிறது.

ரொனால்டோ தொடர்ந்து நான்கு நாள்களாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட்டின் பயிற்சிகளில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அணியிலிருந்து வெளியேற விரும்புவதாக தெரியப்படுத்தியிருந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

சென்ற பருவத்தில் படுமோசமாக விளையாடிய யுனைடெட்டிற்குப் பல ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய ஒரே வீரர் ரொனால்டோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!