புட்டினிடம் உதவி கேட்ட ராஜபக்சே

கொழும்பு: இலங்­கைக்கு எரி­பொருளை இறக்­கு­மதி செய்து உத­வு­மாறு அந்­நாட்டின் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே, ரஷ்ய அதி­பர் விள­ாடிமிர் புட்­டி­னி­டம் கேட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யில் விரை­வில் அறவே பெட்­ரோல் இல்­லாத நிலை உரு­வெ­டுக்­கும் அபா­யம் இருப்­ப­தாக கடந்த வார இறு­தி­யில் அந்­நாட்­டின் எரி­சக்தி அமைச்­சர் எச்­ச­ரித்­தி­ருந்­தார். அதைத் தொடர்ந்து திரு ராஜ­பக்சே உதவி நாடி­யுள்ளார்.

இரு­நா­டு­க­ளின் தலை­ந­க­ரங்­களான மாஸ்­கோ­விற்­கும் கொழும்­பிற்­கும் இடையே மீண்­டும் விமா­னச் சேவை­களை இயக்­கு­மாறு தாம் தாழ்­மை­யு­டன் வேண்­டு­கோள் விடுத்­த­தாக திரு ராஜ­பக்சே கூறினார்.

"சுற்­றுப்­ப­ய­ணம், வர்த்­த­கம், கலா­சா­ரம் போன்­ற­வற்­றில் இரு­தரப்பு உறவை வலுப்­ப­டுத்­து­வதன் மூலம்தான் இரு நாடு­க­ளுக்­கும் இடையே உள்ள நட்பை மறு­வு­று­திப்­ப­டுத்தமுடி­யும் என்பதே ஒருமித்த கருத்து," என்­றும் திரு ராஜ­பக்சே குறிப்­பிட்­டார்.

நெருக்­க­டி­யைக் கையாள கடந்த சில மாதங்­க­ளில் இலங்கை ரஷ்­யா­வி­ட­மி­ருந்து எரி­பொ­ருள் வாங்கி­யி­ருக்­கிறது. எரி­சக்­தியை ஏரா­ள­மா­கக் கொண்­டுள்ள ரஷ்­யா­விடமிருந்து இன்­ன­மும் எரி­பொ­ருளை வாங்­கத் தயா­ராய் இருப்­ப­தா­க­வும் இலங்கை தெரி­வித்­தி­ருந்­தது.

பெரிய அள­வில் எரி­பொ­ருள் பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கும் இலங்கை, அத்­தி­யா­வ­சி­யச் சேவை­களில் ஈடு­ப­டாத வாக­னங்­க­ளுக்கு பெட்­ரோ­லை­யும் டீச­லை­யும் வழங்­கு­வ­தை சென்ற வாரம் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யது.

இதற்­கி­டையே, கடன் வாங்­கு­வதற்­கான வட்டி விகி­தத்தை இலங்கை­யின் மத்­திய வங்கி உயர்த்தி­யுள்­ளது. படு­மோ­ச­மா­கப் பதி­வாகிய நாட்­டின் பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்த இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சுதந்­தி­ர­மடைந்­த­தி­லி­ருந்து இது­வரை காணாத பொரு­ளி­யல் நெருக்­க­டியை இலங்கை எதிர்­கொண்டு வரு­கிறது. நேற்று முன்­தி­ன­மும் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் தலை­ந­கர் கொழும்­பில் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!