ஐரோப்பாவை மையமாகக் கொண்ட புதிய கிருமிப் பரவல் அலை

ஜெனீவா: ஐரோப்­பாவை மைய­மா­கக் கொண்டு உல­க­ள­வில் கொவிட்-19 கிருமி அதி­கம் பரவி வரு­வ­தாக உலக சுகா­தார நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

ஐரோப்பா மீண்­டும் மோச­மான கிரு­மிப் பர­வல் அலையை எதிர்­நோக்கி வரு­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் அவ­சர சுக­ாதார விவ­கா­ரப் பிரி­வின் நிர்­வாக இயக்­கு­ந­ரான டாக்­டர் மைக்­கல் ரயன் கூறி­னார். இந்­நிலை மற்ற பகு­தி­களி­லும் உரு­வெ­டுக்­கும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தென்­கி­ழக்­கா­சியா உள்­ளிட்ட வட்டாரங்கள் தற்­போது புதிய கொவிட்-19 கிரு­மிப் பர­வல் அலையை எதிர்­கொண்டு வரு­வதை டாக்­டர் ரயன் சுட்­டி­னார்.

உல­க­ள­வில் கடந்த இரு வாரங்­க­ளாக கொவிட்-19 கிரு­மித்­தொற்றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. பிஏ.4, பிஏ.5 வகை ஓமிக்­ரான் கிரு­மித் ­தொற்­றால் ஐரோப்­பா­வி­லும் அமெ­ரிக்­கா­வி­லும் கிருமித் ­தொற்­றுச் சம்­ப­வங்­கள் கூடி­யுள்­ளன.

இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள புதிய பிஏ.2.75 வகை ஓமிக்­ரான் கிரு­மி­யை­யும் தான் கண்­கா­ணித்து வரு­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­தது.

பிரிட்­டன் போன்ற நாடு­களில் மருத்­து­வ­ம­னை­களில் அல்­லது அவற்றின் தீவிர சிகிச்சைப் பிரி­வுகளில் சேர்க்­கப்­பட்­டுள்ள நோயாளிகளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. எனி­னும், இதற்கு முன்பு இருந்த கொவிட்-19 கிரு­மிப் பர­வல் அலை­களில் இருந்­த­தைக் காட்­டி­லும் எண்­ணிக்கை குறை­வா­கப் பதி­வா­கி­யுள்­ளது.

கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தில் பல­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டது இதற்­குக் கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, கொவிட்-19 கிருமித்­தொற்­றுக்கு ஆளான பயணி­களை ஏற்றி வந்த விமா­னச் சேவை­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையை ஹாங்­காங் விலக்­கி­யுள்ளது. தேவை­யற்ற சவால்­கள் எழுந்­த­தா­லும் குடி­மக்­க­ளுக்கு சிர­மம் ஏற்­பட்­ட­தா­லும் தடை விலக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!