ஷின்சோ அபேயின் செயல்கள் மீது அதிருப்தி: சந்தேக நபர் வாக்குமூலம்

தோக்­கியோ: ஜப்­பா­னின் முன்­னாள் பிர­த­மர் ஷின்சோ அபே­யின் செயல்­கள் தமக்கு தி­ருப்தி அளிக்­கா­த­தால் அவரை சுட்­டுக் கொல்ல முடிவு செய்­த­தாக கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் பர­ப­ரப்பு வாக்­கு­ மூ­லம் அளித்­துள்­ளார்.

தேர்­தல் பிர­சா­ரக் கூட்­டத்­தில் பேசிய பிறகு மேடை­யி­லி­ருந்து கீழே இறங்­கிய ஷின்சோ அபேயை அவன் இரண்டு முறை துப்­பாக்­கி­யால் சுட்­டான்.

திரு அபே, 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை­யில் ஜப்­பா­னின் பிர­த­ம­ராக பணி­யாற்­றி­னார். கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்­நிலை கார­ண­மாக அவர் பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­னார்.

இந்த நிலை­யில் நேற்று காலை நாரா என்ற பகு­தி­யில் பொது­மக்­கள் முன்­னி­லை­யில் ஷின்சோ அபே உரை­யாற்­றி­ய­போது டெட்­சுயா யம­காமி, 41, என்ற இளை­ய­ரால் சுடப்­பட்­டார். முதற்­கட்ட விசா­ர­ணை­யில் அபே­யின் செயல்­கள் தமக்கு அதிருப்தி அளித்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்­தேன் என்று நாரா வட்­டா­ர­வா­சி­யான அந்த இளை­யர் கூறி­யுள்­ளார்.

அந்த நபர், கட­லோர தற்­காப்­புப் படை­யின் முன்­னாள் உறுப்­பி­னர் என ஃபியூஜி தொலைக்­காட்சி செய்தி தெரி­வித்­தது. 2005ஆம் ஆண்டு வரை­யில் மூன்று ஆண்டு­ கள் அப்­ப­டை­யில் சந்­தேக நபர் இருந்துள்ளார். அவ­ரி­ட­மி­ருந்த துப்­பாக்­கியை காவல்­து­றை­யி­னர் கைப்­பற்றி உள்­ள­னர்.

இதற்கிடையே ஷின்ேசா அபே கொல்லப்பட்டதற்கு ஜப்பானின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல் என்று கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஷின்சோ அபே சுடப்பட்ட தகவலறிந்ததும் பேசிய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஜப்பானிலிருந்து வரும் தகவல்கள் கவலையளிக்கிறது, அவரது நிலை தெரியவில்லை என்றார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், துப்பாக்கிச் சூடு பேரழிவு தரும் செய்தியாக உள்ளது என்று சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்தியா, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவை இன்று சனிக்கிழமை தேசிய துக்க தினமாக அனுசரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மறைந்த ஷின்சோ அபே மீது இந்தியா கொண்டுள்ள மதிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது. அவரது பதவி காலத்தில் இந்தியா-ஜப்பான் உறவு மேலும் வலுப்பட்டது.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்புக்கு இந்திய பிரதமர் மோடி, ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துள்ளார்.

"எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர் ஒரு சிறந்த உலகளாவிய அரசியல் வாதி, ஒரு சிறந்த தலைவர், சிறந்த நிர்வாகி. ஜப்பானையும் உலகையும் சிறந்த இடமாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். எங்கள் எண்ணங்களும் பிரார்த்த னைகளும் அவரது குடும்பத்தின ருடனும் ஜப்பான் மக்களுடனும் உள்ளன," என்று திரு மோடி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!