சீனாவைவிட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டினர்

பெய்­ஜிங்: கிரு­மிப் பர­வ­லைத் துடைத்­தொ­ழிக்­கும் முயற்­சி­யில் சீனா­வின் ‌ஷாங்­காய் நக­ரம் மூன்று மாதங்­க­ளுக்­கும் மேலாக முடங்­கி­யுள்­ளது. இத­னால் கிட்­டத்­தட்ட 26 மில்­லி­யன் பேர் தங்­க­ளது இயல்பு வாழ்க்­கை­யைத் தொடர முடி­யா­மல் தவித்து வரு­கின்­ற­னர்.

எனவே, அங்கு வசித்து வரும் சிங்­கப்­பூ­ரர்­கள் உட்­பட வெளி­நாட்­டி­னர் சிலர் வெளி­யே­றி­விட்­ட­னர். மேலும் பல­ரும் அங்­கி­ருந்து வெளி­யே­றத் தயா­ராகி வரு­கின்­ற­னர்.

சீனா­வில் உள்ள சிங்­கப்­பூர் வர்தத்க சபை நடத்­திய கருத்துக் ­க­ணிப்­பில், கிட்­டத்­தட்ட கால்­வாசி பேர் சீனா­வை­விட்டு வெளி­யே­றப் போவ­தாக தெரி­வித்­தி­ருந்­த­னர். மூன்­றில் ஒரு பகு­தி­யி­னர் அது­பற்றி இன்­னும் தெளி­வாக முடிவு செய்­ய­வில்லை என்று கூறி­யி­ருந்­த­னர்.

இந்த கருத்­துக்­க­ணிப்­பில் 105 பேர் பதி­ல­ளித்­தி­ருந்­த­னர்.

அமெ­ரிக்கா, ஐரோப்­பிய வர்த்­தக சபைகள் மேற்­கொண்ட கருத்துக்­க­ணிப்­பும் இதையே காட்டு­கிறது.

கிரு­மித்­தொற்றை முற்­றி­லும் துடைத்­தொ­ழிப்­ப­தற்­காக சீனா­வில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் பல வெளி­நாட்­டி­னரை அங்­கி­ருந்து வெளி­யேற தூண்­டு­வ­தாக உள்­ளது என்­கிறது அது.

‌ஷாங்­கா­யில் இரண்டு மாதங்­க­ளாக நீடித்த முடக்­க­நிலை ஒரு மாதத்­திற்கு முன்பு சற்று தளர்த்­தப்­பட்­டது. ஆனால், அங்கு கிரு­மிப் பர­வல் மீண்­டும் தலை­தூக்­கி­ய­தை­ய­டுத்து ‌ஷாங்­கா­யின் பெரும்­பா­லான பகு­தி­களில் கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் கடு­மை­யாக்கப்­பட்­டன.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் மட்­டுமே பொது இடங்­க­ளுக்­குச் செல்­ல­லாம் என்று பெய்­ஜிங் உத்­த­ர­விட்­டது. இது பொது­மக்­க­ளின் கோபத்­தைத் தூண்டி­ய­தால், பிறகு ரத்து செய்­யப்

பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!