தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தாலும் முடக்கநிலை இல்லை

மணிலா: ஆசியா, உல­கம் முழு­வ­தும் கொவிட்-19 மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

ஒமிக்­ரா­னை­விட எளி­தில் பர­வக்­கூ­டிய துணை திரி­பு­கள் பரவி வரும் வேளை­யி­லும் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு இருந்­த­தைப் போல் உலக நாடு­கள் முடக்­க­நிலை என்ற கடு­மை­யான நட­வ­டிக்­கை­யைப் பின்­பற்­ற­வில்லை.

"இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு தடுப்­பூசி கிடை­யாது, நோயெ­திர்ப்பு கிடை­யாது. ஆனால் இப்­போது நிலை­மையே வேறு," என்­று ­பி­லிப்­பீன்ஸ் சுகா­தார அமைச்­சின் ஆலோ­ச­க­ரான தொற்­று­நோ­யி­யல் மருத்­து­வர் சல்­வானா சொன்­னார்.

கிரு­மித்­தொற்­றைத் துடைத்­தொ­ழிப்­பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சீனா­வைத் தவிர பெரும்­பா­லான நாடு­கள் முடக்­க­நிலையை கடைப்­பி­டிக்­க­வில்லை.

மாறாக கூடு­தல் தடுப்­பூசி திட்­டத்­தைத் தீவி­ரப்­ப­டுத்­து­வது, சுகா­தார நடை­மு­றை­க­ளைச் செயல்­படுத்து­வது போன்­ற­வற்றை அவை கடைப்­பி­டிக்­கின்­றன.

கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­களில் இருந்து விடு­பட்டு மெல்ல இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்பிக் கொண்­டி­ருக்­கும் நேரத்­தில், சென்ற ஜூன் மாதம் ஆசிய நாடு­களில் பிஏ.4 மற்­றும் பி‌ஏ.5 துணை திரி­பு­கள் வேக­மாக பரவத் தொடங்­கி­உள்­ளன.

ஜூன் 28ஆம் தேதி நில­வ­ரப்­படி இந்­தோ­னீ­சி­யா­வில் நான்கு வாரத்­தில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் ஆறு மடங்கு அதி­க­ரித்­தன. அந்த சம­யத்­தில் உல­க­ள­வில் ஆக அதிக உயர்­வாக அது இருந்­தது.

தாய்­லாந்­தில் நாளொன்­றுக்கு 2,000 தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின்­றன. ஏப்­ரல் மாதத்­திற்­குப் பிறகு தொற்­றுச் சம்­ப­வங்­கள் அங்கு ஏற்­றம் கண்­டுள்­ளது.

பிலிப்­பீன்­சில் ஜூலை 3ஆம் தேதி­யோடு முடி­வ­டைந்த வாரத்­தில் தொற்று 60 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது. அதே காலகட்­டத்­தில் அதற்கு முந்­திய வாரத்­தோடு ஒப்­பி­டு­கை­யில் இந்­தி­யா­வில் தொற்று

21 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது.

தென்­கொ­ரி­யா­வில் தொடர்ந்து நான்கு நாள்களாக 18,000க்கும் மேற்­பட்­டோர் தொற்­றுக்கு ஆளா­கின்­ற­னர். அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­களி­லும் அதி­க­மா­னோர் தொற்றுக்கு ஆளாகி வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!