கொலை மிரட்டல் விடுத்த 10 வயது சிறுவன் 

சீனாவின் ‌ஷங்காய் நகரில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல பகுதிகளில் பிசிஆர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி சோதனைக்காக வரிசையில் காத்திருந்த ஒரு 10 வயது சிறுவன் ஒருவரைக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளான்.

வரிசையில் சில உறவினர்களுடன் காத்திருந்த சிறுவன் ‘hoverboard’ எனும் ஒருவித நடமாடும் சாதனத்தில் நின்றுகொண்டிருந்தான். அதிலிருந்து அவனை கீழே இறங்குமாறு அதிகாரிகள் கேட்டுகொண்டதால், கூச்சல் போட்டு அவர்களை கொல்லப்போவதாக அவன் கூறியுள்ளான்.

இந்தக் காட்சிகள் பதிவுசெய்யப்பட்ட காணொளி சீன சமூகத் தளங்களில் பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்டது.

சாதனத்தில் நின்றுகொண்டிருக்கும்போது பிசிஆர் பரிசோதனை செய்வது சிரமம். இதனால், அவனை அதிலிருந்து இறங்குமாறு அதிகாரிகள் கேட்டுகொண்டனர். இதனால் சினமுற்றவன் தம்முடைய வீட்டுக்கு ஓடு ஒரு கத்தியுடன் திரும்பிவந்தான்.

அதிகாரிகளை திட்டி, அவர்களை கத்தியால் குத்தபோவதாக சிறுவன் கூறியுள்ளான். இரண்டு அதிகாரிகள் அவனை வளைத்துபிடித்து, கத்தியை அவனிடமிருந்து பிடுங்கினர். அந்த சமயத்தில் ஒரு அதிகாரியை குத்த முயன்றான் சிறுவன். அவனுடன் இருந்த மூன்று பெரியவர்களும் அவனை தடுக்கவோ திட்டவோ இல்லை.
இறுதியாக அவனை ஒருவழியாக சமாளித்து வீட்டுக்கு அனுப்பினர் அதிகாரிகள்.

இந்தக் காணொளியைப் பார்த்த பலரும் சிறுவனுடைய வளர்ப்பு சரியில்லை என்று கருத்துரைத்தனர். இதுவே தங்களது பிள்ளையாக இருந்தால், ஓங்கி ஒரு அடி விழுந்திருக்கும் என்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!