கார்கிவ் பகுதியில் ர‌ஷ்யா மீண்டும் தாக்குதல்

கியவ்: உக்­ரே­னின் வட­கி­ழக்கு நக­ர­மான கார்­கிவ் பகு­தி­யில் ர‌ஷ்யா மீண்­டும் தாக்­கு­த­லைத் தொடங்­கி­யுள்­ளது.

அதன் ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் மூன்று பேர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் 31 பேர் காய­ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் அதன் ஆளு­நர் சென்­ஹு­போவ் கூறி­னார்.

கடை­கள், பொதுமக்களின் குடியிருப்புகளைக் குறி­வைத்து ர‌ஷ்யப் படை­கள் மூன்று ஏவு­க­ணை­களை ஏவி­ய­தா­க­வும் அவர் சொன்­னார்.

"பொது­மக்­க­ளைக் குறி­வைத்து நடத்­தப்­படும் இந்­தத் தாக்­கு­தல்­கள் ர‌ஷ்­யா­வின் தீவி­ர­வாத செயல்," என்­றார் அவர்.

படை­யெ­டுப்­பின் தொடக்­கத்­தில் கார்­கிவ் பகு­தி­யைக் கைப்­பற்ற தீவிர தாக்­கு­தல்­களை நடத்­திய ர‌ஷ்யா, அதை விடுத்து மற்ற பகுதி­களில் தாக்­கு­த­லைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யது.

இதற்­கி­டையே, நேற்று முன்­தினம் டோடென்ஸ் பகு­தி­யில் உள்ள சாஸிவ் யார் நக­ரத்­தில் நடந்த ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்­டோர் எண்­ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்­நி­லை­யில், ர‌ஷ்­யப் படை­யி­ன­ரின் பிடி­யில் உள்ள கெர்­சான் பகுதி­யில் உக்­ரே­னிய படை­கள் பதில் தாக்­கு­தல் நடத்த உள்­ளதால், பொது­மக்­கள் அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு உக்­ரே­னின் துணைப் பிர­த­மர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!