உலக நாடுகளை உருக்கும் வெப்பநிலை

சீனாவின் சில பகு­தி­களில் வெப்பநிலை 40 டிகிரி செல்­சியஸ் வரை செல்லக்கூடும் என்று அந்­நாட்­டின் வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது.

லண்­டன்: உலக நாடு­கள் பல­வற்­றில் கடு­மை­யான வெப்­ப­நிலை நில­வு­கிறது. வரும் வாரங்­களில் அது மேலும் அதி­க­ரிக்­கும் என்று வானிலை மையங்­கள் எச்­ச­ரித்­துள்­ளன.

மேற்கு ஐரோப்பா, குறிப்­பாக லண்­டன் கடு­மை­யான வெப்­ப­அலையை நோக்­கிச் சென்று கொண்­டி­ருக்­கிறது.

லண்டன் நகரில் வெப்­ப­நிலை நேற்று 31 டிகிரி செல்­சி­ய­சாக இருந்­தது.

அங்கு வெப்பநிலைக்கான மூன்றாவது நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வார தொடக்­கத்­தில் தெற்கு இங்­கி­லாந்து, பிரான்ஸ், ஜெர்­மனி, இத்­தாலி ஆகிய நாடு­களில் வெப்­ப­நிலை மேலும் அதி­க­ரிக்­கும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டு

உள்­ளது.

ஐரோப்பாவின் மூன்றாவது ஆக அதிக வெப்பநிலை ஜூன் மாதம் பதிவானது.

இதற்கிடையே, சீனா­வில் வெப்­ப­நிலை அதி­க­மாக உள்­ளதை எச்­ச­ரிக்­கும் வகை­யில் ஆரஞ்சு நிற எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இது அந்நாட்டின் உச்­ச­பட்ச இரண்­டாம் நிலை எச்­ச­ரிக்­கை­யா­கும்.

பெரும்­பா­லான பகு­தி­களில் நேற்று வெப்­ப­நிலை 37 முதல் 39 டிகிரி செல்­சி­யஸ் வரை செல்­லக்­கூ­டும் என்று அந்­நாட்­டின் வானிலை ஆய்வு கூறி­யது.

சில இடங்­களில் அது 40 டிகிரி செல்­சி­யஸ் வரை செல்­லக்­கூ­டும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­நாட்­டின் பல பகு­தி­களில் வெப்­ப­அலை வீசத் தொடங்­கி­யுள்­ளது.

எனவே, வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளைக் குறைத்­துக் கொள்­ள­வும் வெப்­ப­அ­லை­யில் இருந்து பாது­காத்துக் கொள்­வ­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களைக் கடைப்­பி­டிக்­கு­மா­றும் தம் மக்­களுக்கு சீன அரசாங்கம் அறி­வுறுத்­தியுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!