சட்டவிரோதமாக பெறப்பட்ட வெளிநாட்டு நிதி; இம்ரான் கானுக்குப் பின்னடைவு

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தான் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கானின் பிடிஐ கட்சி சட்­ட­வி­ரோ­த­மாக பணம் பெற்­ற­தாக பாகிஸ்­தான் தேர்­தல் ஆணை­யம் நேற்று தீர்ப்­ப­ளித்­தது. இம்­ரான் கானை­யும் அவ­ரது கட்­சி­யை­யும் அர­சி­ய­லில் இருந்து தடை செய்­வ­தற்கு இந்த தீர்ப்பு வழி­வ­குக்­கிறது.

பல ஆண்­டு­க­ளாக இழுத்­த­டிக்­கப்­பட்டு வந்த இந்த வழக்­கில், வெளி­நாட்­டில் இருந்து நிதி பெற்­ற­தாக இம்­ரான் கானின் கட்­சி­மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது.

இது­கு­றித்து இம்­ரான் கான் எந்­தக் கருத்தும் கூறவில்லை. ஆனால் கட்­சி­யின் செய்­தித் தொடர்­பா­ளர் தாங்­கள் எந்­தத் தவ­றும் செய்­ய­வில்லை என்று கூறி­னார்.

தேர்­தல் ஆணை­ய­மும் இது­பற்றி எது­வும் தெரி­விக்­க­வில்லை. ஆனால், உள்­ளூர் ஊட­கம் இச்­செய்­தியை வெளி­யிட்­டுள்­ளது.

"இந்த தீர்ப்பை நாங்­கள் மேல்­மு­றை­யீடு செய்­வோம்," என்­றார் செய்­தித் தொடர்­பா­ளர் ஃபவத் சௌத்ரி.

கட்­சிக்­குக் கிடைத்த நிதி, வெளி­நாட்டு வாழ் பாகிஸ்­தா­னி­யர்­க­ளி­டம் இருந்து பெறப்­பட்­ட­தா­க­வும் அது சட்­ட­வி­ரோ­த­மா­னது அல்ல என்­றும் அவர் சொன்­னார்.

34 வெளி­நாட்­டி­னர் அல்­லது வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து கானின் பிடிஐ கட்சி நன்­கொடை பெற்­றதை மூன்று பேர் கொண்ட தீர்ப்­பா­யம் கண்­ட­றிந்­த­தாக ஊடக செய்­தி­கள் கூறு­கின்­றன.

மேலும், தனது வங்­கிக் கணக்­கு­கள் குறித்து கட்சி போலி­யான பிர­மா­ணப் பத்­தி­ரத்தை சமர்ப்­பித்­துள்­ள­தா­க­வும் 13 வங்­கிக் கணக்­கு­க­ளைக் காட்­டா­மல் மறைத்­து­விட்­ட­தா­க­வும் தீர்ப்­பா­யம் கூறி­யது.

கட்­சிக்கு எதி­ராக புகார் அளித்த அதன் முன்­னாள் உறுப்­பி­ன­ரும் நெருங்­கிய கூட்­டா­ளி­யு­மான அக்­பர் எஸ். பாபர் தேர்­தல் ஆணை­யத்­தின் இந்த தீர்ப்பை வர­வேற்­றுள்­ளார்.

குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து கான் கட்­சி­யில் இருந்து விலக வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் வரை பாகிஸ்­தா­னின் பிர­த­ம­ராக இருந்த இம்­ரான் கான், நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் தோற்ற பிறகு, பத­வி­யில் இருந்து வில­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!