விளையாட்டுச் செய்திகள்

மேசை பந்து: இந்தியாவுக்குத் தங்கம், சிங்கப்பூருக்கு வெள்ளி

சிங்கப்பூருக்காக விளையாடிய கிளாரன்ஸ் சூவ், ஈதன் போ, கோயன் பாங், ஐசக் குவேக் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். படம்: ஏஎஃப்பி

பர்மிங்கம்: காமன்வெல்த் விளையாட்டுகளில் மேசை பந்து போட்டியின் ஆண்கள் குழு பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. சிங்கப்பூர் வெள்ளிப் பதக்கம் வென்றது.

முதல் ஆட்டத்தில் சத்யன் ஞானசேகரன்-ஹர்மீத் தேசாய் இணை வெற்றி பெற்றது. எனினும் 2வது ஆட்டத்தில் அணித் தலைவர் ஷரத் கமல், சிங்கப்பூர் வீரரிடம் தோல்வியடைந்தார். 3வது ஆட்டத்தில் சத்யன் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் தேசாய் வெற்றி பெற 3-1 என இந்தியா வெற்றி பெற்றது.

லான் பவுல் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

பர்மிங்கம்: 'லான் பவுல்' எனும் பந்து உருட்டும் விளையாட்டில் லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா, ரூபா ராணி டிர்கி ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றுள்ளது. முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பதக்கத்தைக் கைப்பற்றியது.

பூப்பந்து விளையாட்டின் கலப்புக் குழு பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. நான்கு போட்டிகள் கொண்ட இப்பிரிவில், மலேசியாவிற்கு எதிராக விளையாடிய இந்திய அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.

பளு தூக்குதலில் 109 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் நேற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி முன்னிலை

பஸ்டெர்ரே: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் ஆட்டத்தை வென்று 2-1 எனத் தொடரில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.

இப்போட்டியில் பூவா, தலையாவில் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி

20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். 44 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதுபெற்றார்.

4வது 20 ஓவர் போட்டி அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஹசன் அலியை நீக்கியது பாகிஸ்தான்

லாகூர்: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அந்த அணியிலிருந்து ஹசன் அலி நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் அருமையான கேட்ச் வாய்ப்பை அவர் நழுவ விட்டதைத் தொடர்ந்து அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஷஹீன் அஃப்ரிடி தொடரில் பங்கேற்பது பற்றி மருத்துவ குழுதான் தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!