பாலர் பள்ளியில் கத்திக்குத்து: சீனாவில் மூன்று பேர் மரணம், அறுவர் காயம்

பெய்­ஜிங்: சீனா­வில் பாலர் பள்ளி ஒன்­றில் நடந்த கத்­திக்­குத்து தாக்­கு­த­லில் 3 பேர் கொல்­லப்­பட்­ட­னர், மேலும் 6 பேர் காய­ம­டைந்­த­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

தென்­கி­ழக்கு சீனா­வின் ஜியாங்சி மாநி­லத்­தின் அந்ஃபு மாவட்­டத்­தில் இந்த தாக்­கு­தல் நடந்­தது.

நேற்று காலை 10 மணி­ய­ள­வில் முக­மூடி, தொப்பி அணிந்த நபர் ஒரு­வர் பள்­ளிக்­குள் நுழைந்து தாக்கு­த­லில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­படு­கிறது.

தலை­ம­றை­வாக உள்ள 48 வயது­டைய அந்த சந்­தேக நப­ரைக் காவல்­து­றை­யி­னர் தேடி வருகின்றனர்.

இச்­சம்­ப­வம் குறித்து உள்­ளூர் ஊட­கம் ஒன்று பகிர்ந்­து­கொண்ட காணொ­ளி­யில், காவல்­துறை அதி­காரி ஒரு­வர் சிறு பிள்­ளையை கையில் தூக்­கிக்­கொண்டு விரைந்து செல்­வ­தைக் காண முடிந்­தது.

தாக்­கு­த­லில் மாண்­ட­வர்­கள், காய­ம­டைந்­த­வர்­க­ளின் வயது குறித்து தக­வல்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

சீனா­வில் இது­போன்ற சம்­ப­வங்­கள் நடை­பெ­று­வது அரி­தா­கும். ஆனால், அண்­மைய ஆண்­டு­களில் பள்­ளி­களில் நடத்தப்படும் கத்திக் குத்து தாக்­கு­தல்­கள் அதி­க­ரித்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

2018ஆம் ஆண்­டில், சோங்­கிங் நக­ரில் பெண் ஒரு­வர் கத்­தி­யால் தாக்­கி­ய­தில் 14 குழந்­தை­கள் காய­ம­டைந்­த­னர்.

2020ஆம் ஆண்­டில், குவாங்சி பகு­தி­யில் உள்ள பாலர் பள்­ளி­ ஒன்­றில், பள்ளி காவ­லர் ஒரு­வர் 39 குழந்­தை­கள், ஊழி­யர்­க­ளைக் கத்­தி­யால் குத்­தி­னார்.

கடந்த ஆண்டு நடந்த மற்­றொரு கத்­திக்­குத்து தாக்­கு­த­லில் 16 குழந்­தை­கள், இரண்டு ஆசி­ரி­யர்­கள் காய­ம­டைந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!