மலேசியாவிற்கு 23,000 இந்தோனீசிய பணியாளர்கள்

கோலாலம்பூர்: மலேசியாவில் இல்லப் பணிப்பெண்களாக வேலைப் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட 23,000 இந்தோனீசிய இல்லப் பணியாளர்களின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ஒற்றை சாளர முறையின்கீழ் முதல் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் இருந்து குழுக்களாக அவர்கள் மலேசியாவிற்கு வருவார்கள் என்று இந்தோனீசியத் தூதர் ஹெர்மோனா சொன்னார்.

தூதரக தரப்பில் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இரு நாட்டுக்கும் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், இந்தோனீசிய இல்லப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் 1,500 ரிங்கிட் சம்பளமும் வாரத்திற்கு ஒருநாள் விடுமுறையும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!