அமெரிக்கா-பிலிப்பீன்ஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் மறுஉறுதி

மணிலா: பிலிப்­பீன்­சு­ட­னான தனது பாது­காப்பு ஒப்­பந்­தத்­தில் அமெ­ரிக்கா உறு­தி­யாக இருப்­ப­தாக அந்­நாட்­டின் வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கன் கூறியுள்ளார்.

அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற சபா­நா­ய­கர் நேன்சி பெலோ­சி­யின் தைவான் பய­ணத்­தால், வட்­டாரத்­தில் நில­வும் பதற்­றத்­திற்கு மத்­தி­யில் பிளிங்­க­னின் இப்பேச்சு முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது.

கம்­போ­டி­யா­வில் நடை­பெற்ற ஆசி­யான் நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­க­ளின் ஆண்­டுக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட பிறகு, பிளிங்­கன் பிலிப்­பீன்ஸ் சென்­றார்.

"இரு நாட்­டிற்­கும் இடை­யி­லான உறவு வலு­வா­னது. அது மேலும் வலுப்­பெ­றும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் அவர்.

தற்­போ­தைய புவி­சார் அர­சி­யல் சூழல், அமெ­ரிக்க-பிலிப்­பீன்ஸ் உறவு எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்­ப­தைக் காட்­டு­வ­தாக உள்­ளது என்­றார் பிலிப்­பீன்ஸ் அதி­பர் மார்­கோஸ் ஜூனி­யர்.

சீனா­விற்கு எதி­ராக தைவானை ஆத­ரிப்­ப­தில் பிலிப்­பீன்ஸ் எப்­போ­தும் விருப்­பம் காட்­டி­ய­தில்லை.

பிலிப்­பீன்­சு­டன் தனது உற­வை வலுப்­ப­டுத்த துடிக்­கும் சீனா­விற்­கும் அமெ­ரிக்­கா­விற்­கும் இடை­யில், தாம் சம­நி­லையைக் கடைப்­பி­டிக்கப் போவ­தாக அதிபர் மார்­கோஸ் சொன்­னார்.

பிலிப்­பீன்­சு­டன் பாது­காப்பு ஒப்­பந்­தம் செய்­து­கொண்­டுள்ள அமெ­ரிக்கா, தென்சீனக் கட­ல் தொடர்­பான மோதல்­களில் பிலிப்­பீன்­சிற்கு ஆத­ர­வான நிலையை எடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!