விளையாட்டுச் செய்திகள்

கலப்பு இரட்டையர் பூப்பந்து: இறுதிப் போட்டியில் சிங்கப்பூர்

பர்மிங்ஹம்: காமன்வெல்த் விளையாட்டுகளின் கலப்பு இரட்டையர் பூப்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் குழுவினர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சிங்கப்பூரின் டெரி ஹீ, ஜெசிக்கா டான் இருவரும் மலேசியாவின் டான் கியென் மெங், லாய் பெய் ஜிங் ஆகியோரைத் திக்குமுக்காடச் செய்தனர். இவர்கள், மலேசிய இணையை 25-23, 21-18 எனும் ஆட்டக்கணக்கில் வென்றனர். இறுதிச் சுற்றில் இங்கிலாந்து விளையாட்டாளர்களை இவர்கள் எதிர்கொள்கின்றனர்.

வெளியேறினார் சிங்கப்பூரின் லோ

பர்மிங்ஹம்: காமன்வெல்த் விளையாட்டுகளில் ஆண்கள் ஒற்றையர் பூப்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றோடு வெளியேறினார் உலக விருதை வென்ற சிங்கப்பூரின் லோ கியன் இயூ. 15-21, 21-14, 21-11 எனும் ஆட்டக்கணக்கில் மலேசியாவின் இங் ட்சி யோங்கிடம் லோ தோற்றார். முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்ற லோ, பிறகு தடுமாறினார்.

அண்மைக் காலமாக சிறப்பாக ஆட சற்று சிரமப்பட்டுவரும் லோ, கடந்த மே மாதத்திலிருந்து அதிக ஓய்வின்றி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருவதைச் சுட்டினார். இதற்கிடையே, 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக லோவை மேம்பட்ட நிலைக்குக் கொண்டு செல்லும் பணியில், பயிற்சிக் குழு ஈடுபட்டு உள்ளதாக சிங்கப்பூர் பூப்பந்து சங்கம் சொன்னது.

மகளிர் ஒற்றையர் பிரிவில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பி.வி.சிந்துவுக்குக் சிங்கப்பூரின் இயோ ஜியா மின் கடும் போட்டியாக இருந்தார். இறுதியில், 21-18, 21-17 என்ற ஆட்டக்கணக்கில் சிந்து வென்றார்.

இந்திய மகளிருக்கு வெண்கலம்

பர்மிங்ஹம்: காமன்வெல்த் விளையாட்டுகளில் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் வெண்கலப் பதக்கம் வென்றனர். நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட பெனால்டி ‌‌ஷுட் அவுட் முறையில், 2-1 என இந்தியா வென்றது.

ஆடவர் ஹாக்கியில் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதுகின்றன. நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல்கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

இபிஎல்: லிவர்பூல் தடுமாற்றம்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரில் தனது முதல் ஆட்டத்தில் ஃபுல்ஹம் குழுவிடம் 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலை கண்டது லிவர்பூல்.

சென்ற பருவத்தில் பட்டம் வெல்வதற்கான போட்டியில் சிட்டிக்குக் கடும் சவாலாக இருந்த லிவர்பூலைப் பின்தங்கச் செய்தார் ஃபுல்ஹம்மின் அலெக்சாண்டர் மிட்ரோவிச். மாற்று ஆட்டக்காரராக வந்த டார்வின் நுனஸ்தான் லிவர்பூலைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார் என்று சொல்லவேண்டும்.

மற்ற ஆட்டங்களில் எவர்ட்டனை 1-0 என்ற கோல்கணக்கில் செல்சியும் சவுத்ஹேம்டனை 4-1 என டோட்டன்ஹம்மும் வென்றன.

மேசை பந்து: சிங்கப்பூருக்கு தங்கம்

பர்மிங்ஹம்: மகளிர் மேசை பந்து விளையாட்டில் சிங்கப்பூரின் ஃபெங் தியன்வி, சக நாட்டவரான ஜெங் ஜியானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். முதல் 3 சுற்று களில் பின் தங்கியிருந்த ஃபெங், கடைசி 4 சுற்றுகளை வென்று 4-3 என்ற ஆட்டக்கணக்கில் வாகை ‌சூடினார். இப்போட்டியில் தங்கமும் வெள்ளியும் சிங்கப்பூருக்கே கிடைத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!