குண்டுவெடிப்பில் எட்டு பேர் மரணம்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்லாமிய சிறுபான்மையின ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர்கள், நபிகள் நாயகத்தின் பேரனாக கருதப்படும் ஹுசைன் அவர்களின் விழாவை அனுசரிக்க ஒன்றுகூடிய இடத்தில் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சன்னி முஸ்லீம் பிரிவின் தீவிரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு, சிறுபான்மையினரைக் குறிவைத்து, அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!