விளையாட்டுச் செய்தி

காமன்வெல்த் விளையாட்டுகள் நிறைவு விழா கொண்டாட்டம்

பர்மிங்ஹம்: பர்மிங்ஹம்மிலிருந்து 11 நாட்கள் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் திங்களன்று நிறைவு பெற்றது. 72 நாடுகள், வட்டாரங்களிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்றனர். அலெக்சாண்டர் அரங்கத்தில் வண்ணமயமான வாணவேடிக்கைகள், நடனங்களுடன் நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இடம்பெற்ற விறுவிறுப்பான பங்கரா நடனம் அனைவரையும் ஆட வைத்தது. காமன்வெல்த் விளையாட்டுகள் நிறைவு பெற்றதை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார். அடுத்த காமன்வெல்த் விளையாட்டுகள் விக்டோரியா நகரில் 2026ஆம் ஆண்டு நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா முதலிடம்

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுகளில் ஆஸ்திரேலியா 178 பதக்கங்களைப் பெற்று பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது. இதில் 67 தங்கப் பதக்கம், 57 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களாகும். போட்டியை நடத்திய இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கனடா 92 பதக்கங்களுடன் (26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம்) 3வது இடத்திலும் இந்தியா 61 பதக்கங்களுடன் (22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்) நான்காவது இடத்திலும் வந்துள்ளன. சிங்கப்பூர் இம்முறை 12 பதக்கங்களை வென்றுள்ளது. அது, நான்கு தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண் கலமாகும். மேசைப் பந்து, பூப்பந்து, நீச்சல் உள்ளிட்ட போட்டிகளில் சிங்கப்பூர் சாதித்துள்ளது.

சிங்கப்பூர் மேசைப் பந்து

சங்கத் தலைவர் ஓய்வு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் மேசைப் பந்து சங்கத்தின் தலைவர் எலன் லீ, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். 65 வயது வழக்கறிஞரான அவர் அதிகபட்சமாக நான்கு முறை இரண்டு ஆண்டு தவணைக் காலத்திற்குப் பதவி வகித்துள்ளார். சங்கத்தின் அடுத்த தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் போ லி சான் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!