ராஜபக்சே சகோதரர்கள் நாட்டைவிட்டுச் செல்ல தடை நீட்டிப்பு

கொழும்பு:மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே சகோதரர்கள் வெளிநாடு செல்ல பிரப்பிக்கப்பட்ட தடையை இலங்கை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது

இலங்கையை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர்.

கடந்த மாதம் 15-ந் தேதி, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கண்ட 3 பேரும் நாட்டை விட்டு வெளியேற ஜூலை 28ஆம் தேதிவரை தடை விதித்தது. பிறகு இத்தடை ஆகஸ்டு 2ஆம் தேதி வரையும், 11ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை உச்ச நீதிமன்றம் நேற்று மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை செப்டம்பர் 5ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!