விண்வெளி மேடையில் பறந்த இந்தியக் கொடி

இந்தியா அதன் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல நாடுகள் அதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், விண்வெளியிலிருந்தும் இந்தியாவுக்கு சிறப்பு வாழ்த்துகள் அனுப்பப்பட்டன. 

இந்திய வம்சாவளியினரான அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா சாரி அனைத்துலக விண்வெளி மேடையிலிருந்து இந்தியக் கொடியை பறக்கவிட்டுள்ளார். இதை புகைப்படம் எடுத்த தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இவர். இந்த புகைப்படத்தின் பின்னணியில் பூமி தெரிகிறது. 

“இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் இந்திய வம்சாவளியினரை நான் நினைவுகூறுகிறேன். விண்வெளி மேடையிலிருந்து பார்க்கும்போது என் தந்தையின் சொந்த ஊரான ஹைதராபாத் பளிச்சென்று மின்னுகிறது. நாசா அமைப்பில் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது,” என்று அவர் பதிவிட்டுள்ளார். 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணிபுரிகிறார் சாரி. 2017ல் அவர் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
சாரியின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். சாரி அமெரிக்காவில் பிறந்து வழந்தவர். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!