நிதியுதவியை தொடர்ந்து இந்தியா, சீனா ஆதரவை நாடும் இலங்கை

கொழும்பு: அனைத்­து­லக பண நிதி­யத்­தின் நிதி­யு­தவி பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் இருக்­கும் இலங்­கைக்கு திருப்­பு­மு­னை­யாக அமை­யக்­கூ­டும். ஆனால் நிலை­யற்ற அர­சி­யல் சூழல் ஒரு­பு­றம், ஒன்­றுக்கு ஒன்று போட்டி மனப்­பான்­மை­யில் இருக்­கும் இந்­தியா, சீனா ஆகிய நாடு­க­ளி­ட­மி­ருந்து கடன் நிவா­ர­ணம் பெறு­வது மற்­றொ­ரு­பு­றம் என இலங்கை அர­சுக்கு சிர­ம­மான கால­கட்­டம் இனி­தான் வர­வுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தின் கடன் திட்­டத்­தின் மூலம் நிதி பெற வேண்­டு­மா­னால் அதற்­கென பல தடை­க­ளைத் தாண்ட வேண்­டி­யி­ருக்­கும் என்­பதை இலங்கை அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்க நன்கு அறி­வார்.

செல­வி­னத்­தைக் குறைப்­பது, வரி உயர்த்­தும் திட்­டம், நாடு­க­ளி­ட­மி­ருந்து பெற்ற கடன்­க­ளி­லி­ருந்து விடு­தலை பெறு­வது போன்­றவை திவா­லான நாடு­கள் வழக்­க­மாக மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள். இது இலங்­கைக்­கும் பொருந்­தும் என்­றா­லும் இலங்­கை­யைப் பொறுத்­த­வரை சில கடி­ன­மான அம்­சங்­கள் இருப்­ப­தாக பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் கூறு­வ­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் கூறு­கிறது.

இதில் முக்­கி­ய­மாக நாடு திவா­லா­ன­பின் எழுந்த ஆர்ப்­பாட்­டங்­க­ளால் இலங்­கையை விட்டு ஓட வேண்­டிய நிலைக்கு முன்­னாள் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே தள்­ளப்­பட்ட நிலை­யில் அவ­ரது இடத்­தில் அதி­ப­ராக அமர்ந்­துள்ள ரணிலை மக்­கள் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும். அதற்­குக் கார­ணம் இலங்கை அர­சி­ய­லில் ரணி­லும் ராஜ­பக்­சே­யும் ஒரே மாதி­ரி­யான அர­சி­யல்­வா­தி­க­ளாக பல­ரும் நினைப்­ப­து­தான். அத்­து­டன், திரு ரணில் சினம் கொண்ட எதிர்க்­கட்­சி­யை­யும் சமா­ளிக்க வேண்­டி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

இலங்கை அர­சின் கடன் சுமை பெரும் சிக்­க­லான ஒன்று மட்­டு­மல்ல, அது அமெ­ரிக்க டாலர் 85 பில்­லி­ய­னி­லி­ருந்து 100 பில்­லி­யன் வரை இருக்­கு­மென மதிப்­பி­டப்­ப­டு­கிறது. இதை ஒரு கட்­டுக்­குள் கொண்­டு­வர வேண்­டு­மா­னால் சீனா, இந்­தியா, ஜப்­பான், வேறு பல தரப்­புக்­கள், அனைத்­து­லக நிதி­வள மேலா­ளர்­கள் எனப் பல­ரும் இழப்­பு­களை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும்.

"நான் பார்த்­த­வரை மிகப்­பெ­ரிய சிக்­க­லான சூழ­லில் இது­வும் ஒன்று, என்று ரென­சோன்ஸ் கேப்­பிட்­டல் நிறு­வ­னத்­தின் தலை­மைப் பொரு­ளி­யல் வல்­லு­நர் சார்ல்ஸ் ராபர்ட்­சன் கூறு­கி­றார்.

"அர­சாங்­கத்­தின் நிதி ஆதா­ர­மாக விளங்­கும் வரி­களை கட்­டிக்­காக்க முடி­யாத வகை­யில் குறைக்­கப்­பட்­டுள்­ளது. பின்­னர், பய­ணத்­துறை வரு­வாய் குறைந்த நிலை­யிலு­ம் அரசு நாணய மதிப்பை குறைக்­கா­மல் விட்­டது.

இப்­பொ­ழுது நாட்­டில் சேமிப்பே இல்­லாத நிலை, அத்­து­டன் மக்­க­ளி­டையே பஞ்­சம் தலை­வி­ரித்­தா­டு­கிறது," என்று இவர் கருத்­து­ரைத்­துள்­ளார்.

இந்த நெருக்­கடி கார­ண­மாக இலங்­கை­யின் 22 மில்­லி­யன் மக்­கள் தொகை­யில் கால்­வா­சி­யி­னர் போது­மான, சத்­துள்ள உணவு கிடைக்­கா­மல் தவிப்­ப­தாக ஐநா கூறு­கிறது.

அனைத்­து­லக பண நிதி­யத்­தின் நான்­காண்டு நிதி­யு­த­வித் திட்­டத்­தின்­கீழ், இலங்கை அரசு நிதி சீர்­தி­ருத்­தக் கொள்­கை­களை அமல் படுத்த வேண்­டும்.

அத்­து­டன் ராஜ­பக்சே காலத்­தில் இலங்­கை­யின் மத்­திய வங்கி அர­சாங்க ஆணை­யின்­படி நெருக்­க­டியை சமா­ளிக்க நாண­யத்தை அவ­சர அவ­ச­ர­மாக அச்­ச­டித்த நிலைமை மாறி மத்­திய வங்கி அர­சின் கட்­டுப்­பாட்­டில் இல்லா­மல் சுதந்­தி­ர­மா­கச் செயல்­பட அனு­ம­திக்­கப்­பட வேண்­டும்.

மேலும், பெரு­ம­ளவு கடன் வழங்­கி­யி­ருக்­கும் சீனா, இந்­தியா, ஜப்­பான் போன்ற கட­னு­தவி வழங்­கி­யுள்ள மற்ற நாடு­க­ளி­ட­மி­ருந்தும் கடன் நிவ­ராண உத்­த­ர­வா­தம் இல்­லா­மல் அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தின் நிதி­யு­தவி சாத்­தி­யப்­ப­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி விளக்­கு­கிறது.

இந்­நி­லை­யில், அனைத்­து­லக பண நிதி­யத்­துடன் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கும் ஒப்­பந்­தத்தை நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கு­மாறு எதிர்க்­கட்­சி­ உறுப்பினர்கள் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!