ஈராண்டுகளுக்கு எரிசக்தி கட்டண உயர்வை நிறுத்திவைக்கும் புதிய பிரிட்டிஷ் பிரதமர்

லண்­டன்: பிரிட்­ட­னில் அக்­டோ­பர் 1ஆம் தேதி­மு­தல், குடும்­பங்­க­ளுக்­கான எரி­சக்தி கட்­டண வரம்பு ஆண்­டுக்கு £2,500 (S$4,046) என அடுத்த ஈராண்­டு­க­ளுக்கு மாற்­றப்­ப­டாது என்று புதிய பிர­த­மர் லிஸ் டிரஸ் அறி­வித்­துள்­ளார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பிரத­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட அவர், பய­னீட்­டா­ளர்­க­ளை­யும் வர்த்­த­கங்­களை­யும் பாது­காக்க தாம் உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப் போவ­தா­கக் கூறி­யி­ருந்­தார்.

குடும்­பங்­கள் வறு­மையை எதிர்­கொள்­வ­தை­யும் வர்த்­த­கங்­கள் நஷ்­டத்­தைச் சந்­திப்­ப­தை­யும் தடுக்க வேக­மாக செயல்­படும் நிலைக்கு பிர­த­மர் டிரஸ் தள்­ளப்­பட்­டுள்­ளார்.

இந்­தத் திட்­டத்­தின் முழுச் செலவு குறித்த விவ­ரங்­களை நிதி அமைச்­சர் குவாசி குவார்­டெங் பின்­னார் வெளி­யி­டு­வார். இந்த நட­வ­டிக்கை மூலம் பண­வீக்­கத்தை 5 விழுக்­காடு வரை தாம் கட்­டுப்­படுத்­தப் போவ­தாக பிர­த­மர் டிரஸ் கூறி­னார்.

இந்த அறி­விப்பு முன்­ன­தாக, குடும்­பங்­க­ளுக்­கான எரி­சக்தி கட்­ட­ணங்­கள், அக்­டோ­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து ஆண்­டுக்கு £3,549ஐ எட்டவிருந்­தன. ஆண்­டுக்கு தற்­போ­தைய சரா­சரி கட்­ட­ணம் £1,971ஆக உள்­ளது.

சரா­சரி எரி­சக்தி கட்­டண வரம்பு அக்­டோ­ப­ரில் 80 விழுக்­கா­டும் பின்னர் குளிர்­கா­லத்­தில் மேலும் உயர்ந்தால் பிரிட்­ட­னில் மில்­லி­யன் கணக்­கான குடும்­பங்­கள் வறு­மைக்குத் தள்­ளப்­ப­டக்­கூ­டும் என்று அறக்­கொடை அமைப்­பு­கள் எச்­ச­ரித்­து இ­ருந்­தன.

தொழில் நிறு­வ­னங்­கள் அபா­யத்தை எதிர்­நோக்­கு­கின்­றன. தாங்­கள் தொழி­லை­விட்டு வெளி­யேற மிரட்­டும் அள­வுக்கு தாங்­கள் எரி­சக்தி கட்­ட­ணங்­க­ளைச் செலுத்த வேண்­டி­யி­ருப்­ப­தாக வர்த்­தக உரி­மை­யா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!