எலிசபெத் அரசியார் மறைவு: அரச குடும்பம் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கும்

எலிசபெத் அரசியாரின் மறைவுக்காக பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் ஏழு நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பர். அரசியாரின் இறுதிச் சடங்கு நிறைவடையும் வரை துக்கம் அனுசரிக்கப்படும். இந்த காலகட்டத்தில் அனைத்து அரச குடும்ப மாளிகைகளில் கொடி அரைகம்பத்தில்
பறக்கும்.

வெள்ளிக்கிழமையன்று லண்டனில் உள்ள ஹயிட் பூங்காவில் மரியாதை பீரங்கி முழக்கம் இடம்பெறும். ராணியார் வாழ்ந்த ஆண்டுகளை குறிக்கும் விதத்தில் 96 முறை பீரங்கி முழக்கம் நடக்கும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.

ராணியின் இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும் என அரண்மனை தெரிவிக்கவில்லை. ஆனால் அது அவருடைய மறைவுக்கு 11 நாள்கள் கழித்து இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராணியின் மறைவை முன்னிட்டு இந்திய அரசாங்கம் செப்டம்பர் 11 அன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!