உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

பால­சோர்: ஒடிசா மாநி­லத்­தின் பால­சோ­ரில் அமைந்­தி­ருக்­கும் தற்­காப்பு ஆய்வு, மேம்­பாட்டு நிலை­யத்­தில் இருந்து நேற்று முன்­தி­னம் உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட நவீன ஏவு­கணை சோதிக்­கப்­பட்­டது.

தரை­யி­லி­ருந்து செலுத்­தப்­படும் இந்த ஏவு­கணை வானில் உள்ள இலக்கை விரைந்து தாக்கி அழிக்­கும் ஆற்­றல் கொண்­டது.

தாக்க வரும் எதி­ரி­க­ளின் ஏவு­க­ணை­களை வெவ்­வேறு சூழல்­களில் அடை­யா­ளம்­கண்டு, உட­ன­டி­யாக எதிர்­கொண்டு வானி­லேயே அழிக்­கும் ஆற்­றல் இதற்கு உண்டு.

இதன் திறனை இந்­திய ராணு­வத்­தி­னர் நேற்று சோதித்­த­தாக நிலை­யம் தெரி­வித்­தது.

ஆறு முறை வெவ்­வேறு சூழல்­களை பாவனை செய்து நடத்­தப்­பட்ட சோத­னை­கள் அனைத்­தும் துல்­லி­ய­மா­க­வும் வெற்­றி­க­ர­மா­க­வும் நடத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

நடுத்­தர உய­ரத்­தில் நீண்ட தொலைவு செலுத்­து­வது, குறு­கிய தூரத்­திற்கு உய­ரத்­தில் பாய்­வது, இலக்­கின் உய­ரம் மாறு­வ­தற்­கேற்ப ஏவு­கணை தனது உய­ரத்­தைச் சரி­செய்து கொள்­வது, ரேடார் கண்­கா­ணிப்­பில் சிக்­கா­மல் செல்­வது, வில­கிச் செல்­லும் இலக்­கைப் பின்­தொ­டர்ந்து அழிப்­பது, குறுக்கே பாய்ந்­து­வ­ரும் எதிரி ஏவு­க­ணையை முறி­ய­டிப்­பது, அடுத்­த­டுத்து இரண்டு ஏவு­க­ணை­க­ளைச் செலுத்­து­வது போன்ற சோத­னை­கள் வெற்­றி­க­ர­மாக நடை­பெற்­றன.

இர­வு­நே­ரம், பகல்­நே­ரம் இரண்­டி­லும் இதன் செயல்­தி­றன் சோதிக்­கப்­பட்­ட­தாக நிலை­ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தரை­யில் நகர்ந்­து­கொண்­டி­ருக்­கும் ராணுவ வாக­னத்­தில் இருந்­தும் இதை விண்­ணில் ஏவ­லாம் என்­பது புதிய ஏவு­க­ணை­யின் சிறப்பு. அதற்­கேற்ப, தேடி அழிக்­கும் கட்­ட­மைப்பு இதில் பொருத்தப்­பட்­டுள்­ளது.

உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட இந்த ஏவு­கணை வெற்­றி­க­ர­மா­கச் சோதிக்­கப்­பட்­டது குறித்­துத் தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங், இந்திய தற்­காப்பு ஆய்வு, மேம்­பாட்டு நிலை­யத்­திற்­குப் பாராட்டு தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!