1 பி. ரிங்கிட்டைத் தாண்டலாம்

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் அடுத்த பொதுத் தேர்­தலை நடத்த ஒரு பில்­லி­யன் ரிங்­கிட்­டுக்கு மேல் செல­வா­கும் என்று அந்­நாட்­டின் தேர்­தல் ஆணை­யத்­தின் தலை­வர் அப்­துல் கனி சாலே தெரி­வித்­துள்ளார்.

“தேர்­த­லுக்­கான செலவு ஏறத்தாழ 1.1 பில்­லி­யன் ரிங்­கிட்­டா­கப் பதி­வா­கும்,” என்று திரு அப்­துல் கனி கூறி­னார். ‘தி ஸ்டார்’ நாளி­தழுடன் நடந்த நேர்காணலில் அவர் இவ்வாறு சொன்னார்.

மலே­சி­யா­வில் முந்­தைய பொதுத் தேர்­தல் 2018ஆம் ஆண்டு நடை­பெற்­றது. அதற்கு செல­வான தொகை­யில் இரு மடங்­கிற்­கும் அதி­க­மாக அடுத்த பொதுத் தேர்­தலுக்­கு செலவாகும் என்று அவர் குறிப்­பிட்­டார். சென்ற பொதுத் தேர்­த­லுக்கு சுமார் 500 மில்­லி­யன் ரிங்­கிட் தொகை செல­வா­னது.

மேலும், அடுத்த பொதுத் தேர்­தலுக்­கான செலவு, 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லுக்கு செலவான தொகை­யில் கிட்­டத்­தட்ட மும்­ம­டங்­காக இருக்­கும் என்­றும் அவர் சுட்­டி­னார்.

மலே­சி­யா­வில் வாக்­க­ளிப்­போரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. அதற்­கு மனி­த­வ­ளம் உட்­பட கூடு­தல் வளங்­கள் தேவைப்­படு­கின்­றன.

அத­னால் இம்­முறை செலவு அதிகரிக்கும் என்று திரு அப்­துல் கனி சொன்­னார்.

மலே­சி­யா­வில் சென்ற ஆண்டு டிசம்­பர் மாதத்­தி­லி­ருந்து வாக்­க­ளிப்­ப­தற்­கான குறைந்­த­பட்ச வயது 21லிருந்து 18க்குக் குறைக்­கப்­பட்டது. அதோடு, அந்த கால­கட்டத்­தில் வாக்­க­ளிப்­போ­ர் பதி­வு­செய்­வ­தற்­கான தானி­யக்க முறை­யும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்­த­கைய கார­ணங்­க­ளால் மலே­சி­யா­வில் வாக்­க­ளிப்­போ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. அத­னால் தேர்­தலை நடத்த தேர்­தல் ஆணை­யத்­திற்கு சுமார் 366,000 பேர் தேவைப்­ப­டு­கின்­ற­னர். சென்ற பொதுத் தேர்­த­லில் 260,000 பேர் மட்­டுமே தேவைப்­பட்­ட­னர்.

அடுத்த பொதுத் தேர்­த­லுக்­குக் கூடு­தல் வாக்­க­ளிப்பு நிலை­யங்­கள் உள்­ளிட்­டவை தேவைப்­படும் என்­றும் திரு அப்­துல் கனி தெரி­வித்­தார். சென்ற பொதுத் தேர்­த­லில் இருந்­த­தைக் காட்­டி­லும் கூடு­த­லாக 550 வாக்­க­ளிப்பு நிலை­யங்­கள் அமைக்­கப்­படும்.

மலேசியாவில் பொதுத் தேர்தலை நடத்த அதிகம் செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!