அம்னோவுக்கு நிபந்தனை விதிக்கவில்லை: பிரதமர்

கோலாலம்பூர்: இவ்­வாண்டு முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பை வெளியிடு­வ­தற்­காக அம்னோ கட்சித் தலை­வர்­க­ளுக்கு நிபந்­த­னை எதுவும் விதிக்­க­வில்லை என்று மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­தார்.

அம்­னோ­வின் உதவித் தலை­ வரு­மான திரு இஸ்­மா­யில் சப்ரி, ஐந்து உயர்­மட்ட தலை­வர்­களில் ஒரு­வ­ரு­டன் தேர்­தல் குறித்து கருத்­தி­ணக்­கம் ஏற்­பட்­ட­தா­கக் கூறி­னார்.

"நாங்­கள் (அம்­னோ­வின் ஐந்து உயர்­மட்ட தலை­வர்­கள்) பொதுத் தேர்­தலை விரை­வில் நடத்த வேண்­டும் என்று தொடர்ந்து கூறி வரு­கி­றோம்.

"நான் எந்த நிபந்­த­னை­யும் விதிக்­க­வில்லை. உயர்­மட்டத் தலை­வர்­கள் சந்­திப்பு, உச்­ச­மன்­றக் கூட்­டம் நடந்த பிறகு இறுதி முடிவு எடுக்­கப்­படும்," என்றார் அவர்.

"முன்­கூட்­டியே தேர்­தல் நடத்­து ­வ­தற்கு நல்ல கார­ணங்­கள் இருந்­தால் நாங்­கள் அதற்கு இணங்கு வோம். கடந்த ஆண்­டி­லி­ருந்து நீங்கள் காத்­தி­ருக்­கி­றீர்­கள். இவ்­வாண்டு இன்­னும் சிறி­து­கா­லம் காத்­தி­ருக்­க­லாம்," என்று அவர் தெரி­வித்­தார்.

மால்­டி­ரேட் மாநாட்டு, கண்­காட்சி நிலை­யத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற தேசிய கல்வி நிபு­ணர் மாநாட்­டில் கலந்­து­கொண்ட பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி தனது கருத்தை வெளி­யிட்­டார்.

இந்த நிலை­யில் பெர்­சத்­துக் கட்சி, நாடா­ளு­மன்­றத்­தைக் கலைப் ­ப­தற்கு முன்பு மக்­கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­று­வ­தில் மட்­டுமே அம்னோ கவ­னம் செலுத்­தக்­கூ­டாது. பரு­வ­நிலை, பாது­காப்பு ஆயத்­தம், தேசிய தேர்­தல் செலவு ஆகி­ய­வற்­றை­யும் பரி­சீ­லிக்க வேண்­டும் என்று பெர்­சத்­து­வின் துணைத் தலைவர் அஹ­மட் ஃபைஸால் அசுமு கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே நாடாளுமன்­றத்­தைக் கலைத்த பிறகு வரவுசெல­வுத் திட்­டம் தாக்­கல் செய்­யப்­பட்­டால் அது சட்­ட­பூர்­வ­மாக இருக்­காது என்று நிபு­ணர்­கள் சிலர் கூறி­யுள்­ள­னர். அடுத்த ஆண்­டுக்­கான மத்­திய அர­சாங்­கத்­தின் வரவு செலவுத் திட்­டம் ஒரு மசோ­தாவாகவே இருக்­கும். விவா­தம் முதல் வாக்­க­ளித்து ஒப்­பு­தல் அளிப்­பது வரை­யி­லான நடை­மு­றை­கள் முழு­மை­யாக நடக்க வேண்டும். அதன் பிறகே வரவு செல­வுத் திட்­டம் சட்­டபூர்­வ­மா­கும் என்று வழக் ­க­றி­ஞர்­க­ளான ஃபாஹ்ரி அஸாட், சுரேந்­திர ஆனந்த் ஆகிய இரு­ வரும் கூறி­­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!