கடும் குறைகூறலுக்கு இடையே பொருளியல் திட்டம் தொடரும் என்கிறார் லிஸ் டிரஸ்

லண்­டன்: அண்­மை­யில் பிர­த­மர் பொறுப்பு ஏற்ற லிஸ் டிரஸ் அறி­வித்­துள்ள வரிக் குறைப்பு பொரு­ளி­யல் நட­வ­டிக்­கைக்கு கடும் விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன. ஆனால் தமது பொரு­ளி­யல் திட்­டம் தொடர்­வது அவ­சி­யம் என்று நேற்று அவர் தெரிவித்தார்.

நிதி ஒதுக்­கப்­ப­டாத வரிக் குறைப்­புக்கு அடிப்­படை தளத்தை அமைத்து சிறப்­பா­கச் செய்­தி­ருக்க முடி­யும். இருந்­தா­லும் தொடர்ந்து அதனை அம­லாக்­கு­வது நல்­லது என்று லிஸ் டிரஸ் கூறி­னார்.

இங்­கி­லாந்து பதற்­ற­மான பொரு­ளி­யல் சூழலை எதிர்­நோக்­கு­வதை ஒப்­புக்கொண்ட அவர், உயர் வளர்ச்சி, குறைந்த வரி பொரு­ளி­ய­லுக்கு தமது திட்­டம் இட்­டுச் செல்­லும் என்­றார்.

இருந்­தா­லும் லிஸ் டிரஸ்­ஸின் பொரு­ளி­யல் திட்­டம் அவ­ரது கன்­சர்­வேட்­டிவ் கட்­சி­யி­னரை கவலை அடைய செய்­துள்­ளது. மேலும் பிரிட்­டிஷ் பவுண்ட் வீழ்ச்­சி­ய­டைந்­தது. உலக முழு­வ­தும் பங்­குச் சந்­தை­யில் பவுண்­டின் வீழ்ச்சி எதி­ரொ­லித்­தது.

மத்திய இங்கிலாந்து நகரமான பர்மிங்ஹமில் நேற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் நான்கு நாள் மாநாடு தொடங்கிய வேளையில் டிரஸ்ஸின் கருத்து வெளியாகியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் பதவியை ஏற்ற லிஸ் டிரஸ், பல ஆண்டுகால பிரிட்டனின் மந்த மான பொருளியலுக்கு முடிவுகட்ட பொருளியல் திட்டங்களை மறு வடி வமைக்கப்போவதாகக் கூறியிருந் தார்.

ஆனால் செப்டம்பர் 23ஆம் தேதி அரசாங்கம் அறிவித்த 45 பில்லியன் பவுண்ட் வரிக்குறைப்பை உள்ள டக்கிய பொருளியலைத் தூண்டும் திட்டத் துக்கு அரசாங்கம் கடன் வாங்கித்தான் ஈடுகட்ட முடியும்.

இதனால் பவுண்டின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு யுஎஸ் டாலருக்கு எதிராக கடும் வீழ்ச்சியடைந்தது.

அதிக வருமானம் உள்ளவர் களுக்கு வரிக்குறைப்பு செய்தது தவறானது, அதை மாற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மிஷல் கோவ் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!