விளையாட்டுத் துளிகள்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இங்கிலாந்து

லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 4-3 எனும் ஆட்டக்கணக்கில் வென்றுள்ளது இங்கிலாந்து (படம்). தொடரின் ஏழாவது ஆட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தானை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பந்தடித்த இங்கிலாந்து மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்களைக் குவித்தது. அதற்குப் பிறகு எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது பாகிஸ்தான்.

நிர்வாகியைப் பணிநீக்கம் செய்த உல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸ்

வுல்வர்ஹேம்ப்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான உல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸ் அதன் நிர்வாகி புரூனோ லாஜைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தப் பருவம் தொடங்கியதிலிருந்து உல்வ்ஸ் சரியாக விளையாடாதது அதற்கான காரணம்.

இப்பருவத்தில் அக்குழு இதுவரை விளையாடிய எட்டு ஆட்டங்களில் ஒன்றை மட்டுமே வென்றுள்ளது உல்வ்ஸ். இதர ஆட்டங்களில் நான்கில் தோல்வியடைந்தது.

கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்ப்புகளை மிஞ்சிய உல்வ்ஸ் இந்தப் பருவத்தில் இதுவரை சோபிக்கவில்லை.

விம்பிள்டனுக்குப் பிறகு மீண்டும் ஜோக்கோவிச் விருது

டெல் அவிவ்: டெல் அவிவ் பொதுவிருது டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிண்ணத்தை வென்றுள்ளார் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச். குரோவேஷியாவின் மரின் சிலிச்சை 6-3, 6-4 எனும் ஆட்டக்கணக்கில் ஜோகோவிச் வென்றார்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் பொதுவிருதுப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிண்ணத்தை வென்ற ஜோக்கோவிச், அதற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் வெற்றி வாகை சூடியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!