ஜப்பானைக் கடந்து சென்ற மற்றுமொரு வடகொரிய ஏவுகணை

அடையாளம் தெரியாத கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி இருப்பதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை ஜப்பான் எல்லையின் மேற்பரப்பில் பறந்ததாக தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் அலுவலகம், மக்களை அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது.

மேலும் ஏவுகணை ஜப்பனைக் கடந்து சென்றபோது ஜப்பான் அதன் ரயில் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

ஏவுகணை ஜப்பானைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது. இதற்கு முன்னர் 2017ல் இதுபோன்ற சோதனை ஏவுகணையைப் பாய்ச்சியது வடகொரியா.

ஆனால் இந்த அண்மைய ஏவுகனை ஆக அதிகமாக 4,600 கிலோமீட்டார் தூரத்தைக் கடந்து சென்றுள்ளது.

கொரிய எல்லையில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இவ்வேளையில் அடுத்தடுத்து வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 25 ஆம் தேதி தேதியிலிருந்து 3 முறை ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கும் வட கொரியா 4 வது முறையாக இன்று சோதனை நடத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!