விசாவில் மாற்றங்களைச் செய்த ஐக்கிய அரசு சிற்றரசு; இந்தியர்களுக்குப் பலன் அளிக்கும்

ஐக்கிய அரசு சிற்றரசு(UAE) தனது விசா கொள்கைகளில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் மாற்றங்களை அறிவித்துள்ளது.

புதிய விசா விதிகளின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கான நீண்ட கால விசா, தொழில் வல்லுநர்களுக்கு நீண்ட காலம் தங்குவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுப்பயணிகளுக்கான விசா 30 நாள்களிலிருந்து 60 நாள்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடிக்கடி வந்து போகும் ஐந்து ஆண்டுகளுக்கான 'மல்டி என்ட்ரி' சுற்றுப்பயணிகள் விசாவும் (multi entry tourist visa) இனி வழங்கப்படும்.

தொழில்நுட்பர்கள் வேலை தேடுவதற்கு ஏதுவாக 'ஸ்பான்சர்' (sponsor) இல்லாத விசாவுக்கும் இனி விண்ணப்பம் செய்யலாம்.

தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கான புதிய கோல்டன் விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிற்கு அதிக முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஈர்க்க, இந்தப் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய அரசு சிற்றரசு தெரிவித்துள்ளது.

க்ரீன் விசா

க்ரீன் விசாவின் அடிப்படையில் புலம்பெயர்ந்தோர் ஐந்து ஆண்டுகள் வரை அங்கு தங்கலாம். அதை புதுப்பிக்கவும் செய்யலாம்.

இது சுய 'ஸ்பான்சர்' விசாவாக இருக்கும். அதாவது இதற்காக ஐக்கிய அரசு சிற்றரசு குடிமகன், இங்கு வரும் நபரின் விசாவை 'ஸ்பான்சர்' செய்யத் தேவையில்லை. ஃப்ரீலான்ஸர்கள், சுயதொழில் செய்பவர்கள், திறமையான தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள் அல்லது அவர்களது கூட்டாளிகள் இந்த விசாவிற்கு தகுதியுடையவர்கள்.

க்ரீன் விசா வைத்திருப்பவர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். அவர்கள் அங்கு தங்கியிருக்கும் காலத்தில் தங்கள் மனைவி அல்லது கணவன், குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்களை தங்களோடு வைத்துக் கொள்ள முடியும்.

பத்து வருட கோல்டன் விசா

ஐக்கிய அரசு சிற்றரசு முதலீடு செய்யும் வெளிநாட்டு தொழில் முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், அறிவியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் வல்லுநர்கள், மிகவும் திறமையான மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு கோல்டன் விசா வழங்கப்படுகிறது.

சிறந்த திறமையாளர்களை ஐக்கிய அரசு சிற்றரசுக்கு ஈர்ப்பதற்காக கோல்டன் விசா திட்டம் 2020 இல் செயல்படுத்தப்பட்டது. கோல்டன் விசா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விசாவின் காலம் பத்து ஆண்டுகள் வரை இருக்கும்.

ஐக்கிய அரசு சிற்றரசு இந்த மாற்றப்பட்ட விதிகள் இந்தியாவிற்கு மிகவும் பயன் அளிக்கும் என நம்பப்படுகிறது. ஏராளமான இந்திய தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.

ஐக்கிய அரசு சிற்றரசில் 34 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வேலை மற்றும் வணிகத்திற்காக அங்கு சென்றுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!