பிரபல தேசிய பூங்காவில் சுற்றுப்பயணி சுட்டுக்கொலை

தென்னாப்பிரிக்காவில் உள்ள புகழ்பெற்ற குருகர் தேசியப் பூங்காவில் சுற்றுப்பயணி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆயுதங்கள் ஏந்திய கும்பல் அவரை சுட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

குருகர் தேசியப் பூங்காவிலிருந்து 15 கிலோமீட்டர் தூரமுள்ள சொகுசு ஹோட்டலுக்கு ஜெர்மனியைச் சேர்ந்த நான்கு சுற்றுப்பயணிகள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆயுதங்கள் ஏந்திய மூவர் அவர்களை வழிமறித்தனர். வாகனத்தின் கதவை திறக்குமாறு சந்தேக நபர்கள் கூறினர். அதற்குப் பதிலாக வாகன ஓட்டுநர் கதவுகளை தாழிட்டுள்ளார். சந்தேக நபர்களில் ஒருவன் ஓட்டுநரை வாகனத்தின் சன்னல் வழியாக சுட்டதாகக் கூறப்பட்டது. சுற்றுப்பயணிகளிடமிருந்து எதுவும் எடுக்காமல் அவர்கள் தப்பிச்சென்றதாக காவல் துறை கூறியது.

இச்சம்பவம் குறித்து தென்னாப்பிரிக்காவின் சுற்றுப்பயணத் துறை அமைச்சு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துகொண்டது. சந்தேக நபர்களை உடனடியாக தேடி பிடிக்குமாறு காவல் துறையை அமைச்சு கேட்டுகொண்டது.

குருகர் தேசியப் பூங்கா தென்னாப்பிரிக்காவின் ஆகப் பெரிய தேசிய பூங்கா. ஆண்டுதோறும் பல சுற்றுப்பயணிகள் அங்கு வருகையளிக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!