தாய்லாந்தில் பயிர்களை நாசம் செய்த வெள்ளம்

பேங்­காக்: பல ஆண்­டு­கள் காணாத வெள்­ளத்தை தாய்­லாந்து எதிர்­நோக்­கு­கிறது. அந்­நாட்­டில் பல விளை­நி­லங்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இத­னால் தாய்­லாந்­தில் உணவு விலை­கள் மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்ற அச்­சம் நிலவுகிறது. அண்­மை­யில்­தான் அதன் சுற்­றுப்­ப­ய­ணத் துறை மீண்டு வர ஆரம்­பித்­தது. அதில் இடை­யூ­று­கள் வர­லாம் என்ற கவலையும் எழுந்­துள்ளது.

தாய்­லாந்­தின் வட­கி­ழக்­குப் பகுதி­யில் இருக்­கும் சுற்­றுப்­ப­ய­ணி­களி­டையே பிர­ப­ல­மான சியாங்­மாய், தலை­ந­கர் பேங்­காக் போன்­ற­வற்­றின் சாலை­களில் இந்த வாரம் வெள்­ளம் ஏற்­பட்­டது. 'நொரு' சூறா­வ­ளி­யால் பொழிந்த கன­ம­ழை­ கார­ண­மாக சாவ் ஃபிராயா, பிங் ஆறு­களில் நீரின் அளவு உயர்ந்தது.

சுமார் 160,000 ஹெக்­டர் பரப்­பளவு கொண்ட விவ­சாய நிலம் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டது. அதோடு, 72 மாநி­லங்­களில் உள்ள 510 மாவட்­டங்­களில் சுமார் 82,000 வீடு­கள் சேத­ம­டைந்­த­தாக அதி­கா­ர­பூர்வ புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­வித்­தன. வரும் வாரங்­களில் மேலும் புயல் காற்று வீசும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது. பயிர்­க­ளுக்­கும் வீடு­க­ளுக்­கும் மேலும் சேதம் ஏற்­படு­வ­தைத் தவிர்க்க தாய்­லாந்து அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­ற­னர்.

வட­கி­ழக்கு மாநி­லங்­களில் மேற்­கொள்­ளப்­படும் நிவா­ர­ணப் பணி­களை பிர­த­மர் பிர­யுத் சனோச்சா நேரில் சென்று பார்­வை­யிட்­டார். பொரு­ளி­ய­லைக் கவனித்தபடி வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்­குப் பாது­காப்பு வழங்­கப்­போ­வ­தாக அவர் உறு­தி­ய­ளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!