இந்தோனீசிய அதிவேக ரயிலில் பயணியாக ஸி ஜின்பிங்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அடுத்த மாதம் முதல் ஜகார்த்தா, பாண்­டுங் நக­ரங்­க­ளுக்­கி­டையே அதி­வேக ரயில் சேவை இயங்கவுள்ளது. இதுவே தென்­கிழக்­கா­சி­யா­வின் முதல் அதி­வேக ரயில் சேவை.

இதில் பய­ணம் செய்ய இந்­தோ­னீ­சிய அதி­ப­ரான ஜோக்­கோவி எனும் ஜோக்கோ விடோடோ, சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கிற்கு அழைப்பு விடுக்­க­வுள்­ளார். அடுத்த மாதம் 15, 16ஆம் தேதி­களில் பாலி­யில் நடை­பெ­ற­வுள்ள ஜி20 சந்­திப்­பிற்­குப் பிறகு திரு ஜோக்­கோவி அழைப்பு விடுப்­பார் என்று இந்­தோ­னீ­சிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் புடி கார்யா சுமாடி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தார்.

இந்த அதி­வேக ரயில் சீனா­வில் உற்­பத்தி செய்­யப்­பட்­டது. 142 கிலோ­மீட்­டர் நீளம்­கொண்ட இந்த ரயில் பாதைக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் 2016ஆம் ஆண்டு தொடங்­கப்பட்டன. அடுத்த ஆண்டு நவம்­பர் மாதத்­தி­லி­ருந்து இந்­தச் சேவை பய­ணி­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

இந்த ரயில், மணிக்கு 200 கிலோ­மீட்­ட­ருக்­கும் அதி­க­மான வேகத்­தில் செல்லக்கூடியது. வாக­னத்­தில் செல்­லும்­போது இரண்­டரை மணி­நே­ரம் ஆகும் ஒரு பய­ணத்­திற்­கான நேரம் இந்த அதி­வேக ரயி­லில் போகும்­போது 45 நிமி­டங்களாகக் குறை­யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!