நெரிசலில் பலர் கொல்லப்பட்ட மாலாங் நகருக்கு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ வருகை

மாலாங்: இந்­தோ­னீ­சியாவில் நூறு பேருக்கு மேல் உயிரிழந்த மாலாங் நகருக்கு நேற்று அதிபர் ஜோக்கோ விடோடோ வரு­கை­ய­ளித்­தார்.

அங்குள்ள காற்பந்து திடலில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காற்பந்து ரசிகர்கள் உட்பட 131 பேர் உயிரிழந்தனர்.

மாலாங் நகரில் உள்ள சைஃபுல் அன்­வார் மருத்­து­வ­ம­னைக்கு வந்த அதிபர் ஜோக்கோ, இறந்­த­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளைச் சந்­தித்து ஆறு­தல் கூறி­னார்.

சம்­ப­வம் நடை­பெற்ற கன்­ஜு­ரு­ஹான் அரங்­குக்கு அதி­பர் ஜோக்கோ சென்­றார் என்று அதி­பர் அலு­வ­லக அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார். மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­ற­போது அங்கு சிகிச்சை பெற்ற அனை­வ­ருக்­கும் சிறந்த சேவை அளிக்­கப்­பட்­டதை அவர் உறு­திப்­ப­டுத்­திக்கொண்­டார்.

முன்­ன­தாக இறந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு அவர் இழப்­பீ­டு­களை வழங்­கி­னார்.

சம்­ப­வத்­துக்­கான மூல கார­ணத்தைக் கண்­ட­றி­யப்­போ­வ­தாகக் கூறிய அதி­பர் ஜோக்கோ விடோடோ, விசா­ர­ணைக் குழு ஒன்று அமைக்­கப்பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார். அந்­தக் குழு, அர­சி­யல், சட்ட, பாது­காப்பு விவ­கார ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் மஹ­ஃபுட் தலை­மை­யில் செயல்­படும்.

பரம வைரி­யான பெர்­சி­பாய சுர­பாயா அணி­யி­டம் தோல்வி அடைந்­த­தால் அரேமா காற்­பந்து அணியினர் கலவரத்தில் இறங் கினர். அந்த சம­யத்­தில் காவல் ­து­றை­யி­னர் போது­மான நட­வ­டிக்கை எடுக்கவில்லை என்று பொது­மக்­கள் கோப­ம­டைந்து உள்ளனர். இந்த நிலை­யில் அதி­ப­ரின் வருகை இடம்­பெற்­றுள்­ளது.

கல­வ­ரத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முயன்ற காவல்­து­றை­யி­னர் கண்­ணீர்ப்­பு­கைக் குண்­டு­களை வீசி­னர்.

இத­னால், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பார்­வை­யா­ளர்­கள் பீதி­ய­டைந்து அரங்­கி­லி­ருந்து வெளி­யேற ஓடி­னர். ஒரே நேரத்­தில் அனைவரும் வெளி­யே­றும் வாயில்­களை நோக்கி ஓடி­ய­தால் நெரி­சல் ஏற்­பட்டு கீழே விழுந்த பலர் மிதி­பட்டு உயி­ரி­ழந்­த­னர். பலர் மூச்­சுத்­தி­ணறி மாண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!